நடிகை நானி நேற்று தனது 40வது பிறந்தநாளுக்கு நடிகை நஸ்ரியா தெரிவித்த வாழ்த்து ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நானி 40
தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. தெலுங்கு படம் என்ற பொதுவாக மசாலா பாணியில் இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து. ஆனால் நானி, மசாலா பாணி கதைகளை தவிர்த்து தொடர்ந்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ‘ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றவை. சமீபத்தில் நானி , மிருணால் தாக்கூர் நடித்த ‘ ஹாய் நானா’ படம் வெளியானது. இப்படம் நானியின் 30 ஆவது படமாக வெளியானது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டுக்களைப் பெற்றது. இந்நிலையில் நானி நேற்று தனது 40வது பிறந்த நாளைக் கொண்டாடினார். திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
நானிக்கு வாழ்த்து தெரிவித்த நஸ்ரியா
நானிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகை நஸ்ரியா அவருக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா நானி நடித்த ‘அண்டே சுந்தரனிகி’ படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார் நஸ்ரியா, நானி மற்றும் ஃபகத் ஃபாசில் ஆகிய மூவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு நானிக்கு 40 வயது ஆகிவிட்டதை வைத்து அவரை கிண்டலித்து நஸ்ரியா இந்த பதிவை பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக ஷேர் செய்யப் பட்டு வருகிறது
சரிபோதா சனிவாரம்
நானி நடித்துள்ள சரிபோதா சனிவாரம் படத்தின் க்ளிம்ப்ஸ் அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப் பட்டுள்ளது. விவேக் ஆத்ரேயா இப்படத்தை இயக்கியுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நானி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் படிக்க : Mysskin: கெஞ்சிக் கேட்கிறேன்; நடிகைகளை தவறா பேசாதீங்க - திரிஷாவுக்காக குரல் கொடுத்த மிஷ்கின்
Seetha Raman: வசமாக சிக்கிய கல்பனா.. நான்சியை துரத்தும் சீதா - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்