எம். எஸ். தோனி தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனி ஓய்வுபிறகு விவசாயம், இந்தியா சிமென்ட்ஸ்ல் பங்குதாரர் என பல்வேறு துறைகளில் ஈடுப்பட்டு வருகிறார். இந்தநிலையில், எம். எஸ். தோனி தமிழ் திரைப்படங்களின் மேல் கொண்ட காதலால் தமிழ் திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
அவர் தயாரிக்கும் முதல் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் என்றும், ரஜினிகாந்தின் முன்னாள் உதவியாளர் சஞ்சய், தோனி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இணைந்துள்ளார் என்றும் செய்திகள் பரவி வருகின்றனர்.
முதற்கட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும் எனவும், முக்கிய கதாபாத்திரத்தில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, மிடாஸ் டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து விர்சு ஸ்டுடியோ 'அதர்வா - தி ஆரிஜின்' என்ற நாவலில் அதர்வா கதாபாத்திரத்தில் அனிமேஷன் வடிவில் நடித்திருந்தார். இதன் மூலம் எம்.எஸ். தோனி தமிழ் திரையிலகின் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறார் என்று தெரிந்திருக்கும்.
சூப்பர் ஹீரோவாகவும், போர்வீரர் தலைவராகவும் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியை தவிர வேறு யாரும் இதில் நடிக்கவில்லையாம். இந்த நாவலை ரமேஷ் தமிழ்மணி எழுதியுள்ளார். எம்.வி.எம். வேல் மோகன் தலைமையில், வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் அசோக் மேனர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எம்.எஸ். தோனி தனது முகப்புத்தகத்தில் வெளியிட்ட பதிவில், “இந்த திட்டத்துடன் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில் இது ஒரு அற்புதமான முயற்சி. அதர்வா - தி ஆரிஜின் நாவல் ஈர்ப்பு மிகுந்த கதை. அதிவேகமான கலைப்படைப்புகளுடன் வசீகரிக்கும் வகையில் இந்த கிராஃபிக் நாவல் உருவாகியுள்ளது. இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை சமகாலத் திருப்பத்துடன் வெளியிடும் எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் முயற்சி, ஒவ்வொரு வாசகருக்கும் மேலும் பலவற்றைத் தேடித் தரும்.” என்றார்.
இந்தநிலையில், தோனி தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக தோனியே நடிக்கலாம் என்றும், அந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் கூட இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வரும் ஜூன் 9 ம் தேதி விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவியது. இந்த செய்தி உண்மையானால் இந்த படப்படிப்பு ஜூலை தள்ளிபோகலாம் என்றும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, இயக்குநர் விக்னேஷ் சிவன் எடுத்த விளம்பர படம் ஒன்றில் தோனி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்