தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. ரஜினி, அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து தென்னிந்திய ரசிகர்களை தன்பக்கம் இழுத்து கட்டிப்போட்டுள்ளார்.
கடந்த 2015 ம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "நானும் ரவுடி தான் ". இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதலிக்க தொடங்கி தற்போது இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.
வரும் ஜூன் 9 ம் தேதி இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் பரவி வருகிறது. இந்தநிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இன்று திருச்சி விமான நிலையம் வந்தனர். அப்பொழுது, திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஊழியர்கள் பலரும் இவர்களிடம் செல்பி எடுக்க முயற்சி செய்து வந்தனர். இவர்கள் இருவரும் யாரையும் கண்டுகொள்ளாமல் நேராக வெளியே சென்றனர்.
தொடர்ந்து, உயரம் குறைவான பெண் செல்பி எடுக்க முயற்சி செய்தார். இதைப்பார்த்த விக்னேஷ் சிவன், நயன்தாராவிடம் தெரிவித்து அந்த பெண்ணின் கைபேசியை வாங்கி அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
இருவருக்கும் ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், திருமணத்திற்கான பத்திரிகைகள் மற்ற பொருட்களை வைத்து ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருக்கலாம் என்றும், விக்னேஷ் சிவனின் சொந்த ஊரான திருச்சிக்கு தனது வருங்கால மனைவியை அழைத்து வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்