இந்தியா, லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை.


கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு சர்வதேச விமானங்களை சவுதி அரேபியா தடை செய்துள்ளது. கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, சவுதி அரேபியா தனது குடிமக்கள் இந்தியா உட்பட பதினாறு நாடுகளுக்குச் செல்ல தடை விதித்துள்ளது.


இந்தியா, லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மேனியா, பெலாரஸ் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.


அரபு அல்லாத நாடுகளுக்குச் செல்ல விரும்பும் சவுதி அரேபியர்களின் பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலம் 6 மாதங்களுக்கு மேல் இருக்க வேண்டும் என்று சவுதி நிர்வாகம் தனது உத்தரவில் வலியுறுத்தியுள்ளது என்று சவுதி கெஜட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அரபு நாடுகளுக்குள் பயணம் செய்பவர்களின் பாஸ்போர்ட் 3 மாதங்களுக்கு மேல் செல்லுபடியாக வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மற்ற வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுக்கு பயணம் செய்ய விரும்பும் சவுதி குடிமக்கள், அவர்களின் தேசிய அடையாள அட்டை 3 மாதங்களுக்கு மேல் செல்லுபடியாகும்.




குரங்கு காய்ச்சலால் பாதிப்பு எதுவும் இல்லை: சவுதி அரேபியா


சவுதி அரேபியாவில் இதுவரை குரங்கு காய்ச்சலால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது. சவூதி அரேபியாவின் துணை சுகாதார அமைச்சர் அப்துல்லா ஆசிரி கூறுகையில், “சந்தேகத்திற்கிடமான குரங்கு காய்ச்சலைக் கண்காணிக்கவும் அடையாளம் காணவும் அரசாங்கத்திற்கு முழுத் திறன் உள்ளது. நாட்டில் குரங்கு காய்ச்சலானது தலைதூக்கினால், அதைச் சமாளிக்கும் திறன் நாட்டிற்கும் உள்ளது. இதுவரை மனிதனிலிருந்து மனிதனுக்கு குரங்கு காய்ச்சலின் பரவல் மிகவும் குறைவாகவே உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், குரங்கு காய்ச்சலின் பரவல், பாதிப்புகள் கண்டறியப்பட்டால், பரவும் ஆபத்து மிகவும் குறைவு” ” என்றார்.


இதனிடையே, உலகம் முழுவதும் குரங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி, 12 நாடுகளில் 92 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். இந்த பயணத் தடை அவர்களின் பிரச்சனையை அதிகரிக்கலாம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண