கொரோனா இரண்டாவது அலை காரணமாக பல திரைப்படங்கள் தற்பொழுது நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளது. தற்பொழுது அரசு இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது . இதனால் சினிமாத்துறை மற்றும் திரை அரங்குகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே திரை அரங்குகள் மூட பட்ட நிலையில் பல திரைப்படங்கள் தற்பொழுது ஓடிடி-யில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர் . ஓடிடி பக்கம் தற்பொழுது தயாரிப்பாளர்கள் பார்வை திரும்பியுள்ளது .




இதனை கருத்தில் கொண்டு நடிகை நமீதா புதிதாக  ஓடிடி தளம் ஒன்றை தொடங்கியுள்ளார் . ‘நமீதா தியேட்டர்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த ஓடிடி தளத்தில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படங்களை மட்டும் வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார். வளர்ந்து வரும் இயக்குநர்கள் புதிய தயாரிப்பாளர்களுக்கு இந்த ஓடிடி தளம் நல்ல வாய்ப்பாக இருக்கக்கூடும் என்று தெரிவித்து இருந்தார். இந்த ஓடிடி தளம் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக நமீதா தெரிவித்திருக்கிறார் .ஒரு மென்பொருள் பொறியாளர் ரவி வர்மாவுடன் இணைந்து  இந்த தளத்தை தொடங்கியுள்ளார் .



கடந்த ஆண்டு மலையாள  நடிகர் ஜெயராமனும்  Roots Video India என்ற  ஓடிடி தளத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர்களும் தற்பொழுது ஓடிடி தளத்தை நாடி சென்று உள்ளனர். துக்ளக் தர்பார் ,டாக்டர் ,ஜகமே தந்திரம்,நெற்றிக்கண் ,மாமனிதன், நவம்பர் ஸ்டோரி போன்ற படங்கள் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்க கூடிய திரைப்படங்கள். நமீதாவின் ஓடிடி தளம் பற்றிய அதிகாரப்பூர்வ  செய்திகள் மிக விரைவில் வெளியாகக் கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார் .