2004ல் வெளியான "எங்கள் அண்ணன்" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நமீதா. கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ’மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியில் எல்லாரையும் மச்சான்ஸ் என்று அழைத்து அவருடைய ட்ரேட் மார்க் வார்த்தையே மாறியது மச்சான்ஸ்.  தொடர்ந்து, விஜய் டிவியின் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று வெளியேறிய நமீதா, கொஞ்ச காலம் முன்பு பாஜகவில் இணைந்து பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் எல்லாம் செய்தார். 


கடந்த 2017ம் ஆண்டு நடிகை நமீதா நடிப்பில் இருந்து முழுக்கு போட்டு வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து இவர்களுக்கு கடந்த ஆண்டு கிருஷ்ணா ஜெயந்தி நாள் அன்று இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. குழந்தைகள் மற்றும் கணவரோடு எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது பதிவிட்டு வந்தார். 


இந்தநிலையில், புத்தாண்டு என்பது சித்திரை 1ம் தேதி மட்டுமே, ஜனவரி 1 கிடையாது என நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், “ஹலோ, வணக்கம்.. நான் உங்க நமீதா பேசுறேன். ஃப்ரண்ட்ஸ், இன்னைக்கு உங்களுக்கு ஒரு முக்கியமான மெசேஜ் சொல்ல போறேன். நார்மலா நம்ம எல்லாரும் டிசம்பர் 31ம் தேதி வெளியபோய், நியூ இயர் கொண்டாடுறோம். பார்ட்டி பண்றோம். 






ஆனா, அது நம்மளோட கலாச்சாரம் கிடையாது. வீ ஆர் ப்ரவுடுலி இந்தியன்ஸ். வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு வருகிறது. இது ரொம்ப பக்கத்தில் இருக்கிறது. இந்த பண்டிகையை உங்க பிரண்ட்ஸ் அண்ட் குடும்பத்தோட கொண்டாடுங்க.. காலையில் எழுந்திரிருச்சு குளிச்சுட்டு கோவில் போய்ட்டு வாங்க.. மறுபடியும் சொல்றேன் ஜனவரி 1 நம்ம புத்தாண்டு கிடையாது, ஏப்ரல் 14 தான் நம்ம புத்தாண்டு.. எல்லாரும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.. “ என்று தெரிவித்தார். 


மேலும் அந்த வீடியோவிற்கு மேல், ”பெருமை மிக்க பாரத நாட்டில் வாழ்கின்ர, மிக தொன்மையான தமிழர்களாகிய, நமது ஒரே புத்தாண்டு என்பது, வரும் ஏப்ரல் 14ம் தேதி வருகின்ற சித்திரை 1ம் தேதி மட்டுமே.. நிச்சயமாக, ஜனவரி 1 கிடையாது. ஆங்கிலப் புத்தாண்டு என்பது, நமது கலாச்சாரமே கிடையாது. 


அனைவருக்கும், எனது சித்திரைத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.