நமிதா


விஜயகாந்த் நடித்த எங்க அண்ணா படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமிதா. தொடர்ந்து விஜய் , அஜித் , சரத்குமார் , சத்யராஜ் ,உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடம் நடித்துள்ள  நமிதா ஒரு காலத்தில் இளைஞர்களின் இதய ராணியாக இருந்தவர். சில ரசிகர்கள் நமிதாவிற்கு கோயில் கட்டும் வரை சென்றுள்ளார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கடந்த 2017 ஆம் ஆண்டு தனது விரேந்திர செளதரி என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நமிதா. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக வந்த நமிதாவுக்கு இரட்டை ஆண் குழந்தைள் பிறந்தன. கிருஷ்ணா அதித்யா மற்றும் கியான் ராஜ் என தனது குழந்தைகள் இருவருக்கும் கிருஷ்ணரின் பெயர்களை சூட்டினார் நமிதா. 


கோவில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 


இன்று நமிதா தனது கணவருடம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றபோது அங்குள்ள கோவில் அதிகாரிகள் நமிதாவிடம் அவரது வகுப்பு மற்றும் சாதி குறித்து விசாரித்துள்ளார்கள். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட நமிதா இப்படி கூறியுள்ளார் “ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நான் அனைத்து கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று வந்தேன். அதேபோல் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நானும் எனது கணவரும் சென்றோம். அப்போது அங்குள்ள அதிகாரி ஒருவர் என்னிடம் நீங்கள் இந்துவா , அதற்கான சான்றிதழ் இருக்கிறதா என்று கேள்வி கேட்டு எங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார். 






 நான் இந்து என்பது எல்லாருக்கும் தெரியும் . என் திருமணம் திருப்பதியில் நடைபெற்றது. என் குழந்தைகளுக்கு கூட கிருஷ்ணரின் பெயர்களை தான் வைத்திருக்கிறேன். கோவில்களில் இந்த மாதிரி நடப்பது வருத்தமளிக்கிறது. இந்தியாவில் நான் நிறைய கோயிகளுக்கு சென்றிருக்கிறேன் எந்த இடத்திலும் இந்த மாதிரி என்னை யாரும் கேட்டதில்லை . மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்லவிடாமல் என்னை நிறுத்தி வைத்து அந்த அதிகாரி அப்படி கேட்டது மிகுந்த வருத்தமளிக்கிறது. இது குறித்து அமைச்சர் சேகர் பாபு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய சொந்த நிலத்தில் நான் எந்த வகுப்பை சேர்ந்தவள் என்பதை நிரூபிக்க வேண்டியதை நினைத்து எனக்கு அவமானமாக இருக்கிறது. ” என நமிதா தெரிவித்துள்ளார்