தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் விஜய் மில்டன்.  பிரபல ஒளிப்பதிவாளரான இவர் 2014ம் ஆண்டு கோலி சோடா என்ற படம் மூலமாக இயக்குனராக உருவெடுத்தார். 10 என்றதுக்குள்ள, கோலி சோடா 2, மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களை இயக்கிய இவர் தற்போது கோலி சோடா ரைசிங் என்ற பெயரில் கோலி சோடாவின் 3வது பாகத்தை எடுத்துள்ளார்.

Continues below advertisement

கோலி சோடா ரைசிங் டீசருக்கு வரவேற்பு:

திரைப்படமாக அல்லாமல் வெப்சீரிசாக இதை எடுத்துள்ளார். கோலி சோடா ரைசிங்-கின் டீசர் நேற்று வெளியாகியது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் பிரபல இயக்குனரும், நடிகருமான சேரன், ஷ்யாம், அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையில் உருவாகியுள்ள இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெப்சீரிஸ் டிஸ்னி – ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த சீரிஸில் ஷாம், சேரன், அபிராமி ஆகியோருடன் புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, R K விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, உதய ராஜ், முருகேஷ், குட்டி மணி, அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Continues below advertisement

7 மொழிகளில் ரிலீஸ்:

இவர்களுடன் சீதா, ஸ்வேதா, சுஜாதா, இம்மான் அண்ணாச்சி, ஜான் மகேந்திரன் மற்றும் மதுசூதனன் ராவ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். கோலி சோடா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இந்த தொடர் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த வெப்சீரிஸிற்கு பாடல்களை இசையமைப்பாளர் அருண்கிரி உருவாக்கியுள்ளார். சைமன் K கிங் பின்னணி இசை அமைத்துள்ளார்.  தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த வெப்சீரிஸ் 7 மொழிகளில் (தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி) வெளியாகவுள்ளது.

விஜய் மில்டன் கடைசியாக இயக்கிய பைரகி என்ற கன்னட படம், மழை பிடிக்காத மனிதன் படம் பெரியளவில் வெற்றி பெறாத நிலையில் இந்த வெப்சீரிஸ் மூலமாக வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும் என்று நம்பிக்கையுடன் உள்ளார்.