நளினி :
கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் நடிகை நளினி. 1987 இல் முன்னணி நடிகராக இருந்த நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அருணா மற்றும் அருண் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். மனக்கசப்பு காரணமாக கடந்த 2000 ஆம் ஆண்டு ராமராஜன் மற்றும் நளினி இருவரும் விவாகரத்து செய்து தனித்து வாழ்ந்து வருகின்றனர். நாங்கள் பிரிந்து இருக்கிறோமே தவிர ஒருவரை ஒருவர் இன்றும் காதலித்துக்கொண்டுதான் இருக்கிறோம் என நடிகை நளினி பல நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா கொடுத்த பரிசு :
கடந்த 2013 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி நளினி - ராமராஜன் மகள் அருணாவிற்கு நட்சத்திரங்கள் சூழ திருமணம் நடைப்பெற்றது. அப்போது சிறப்பு விருந்தினராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அழைக்கப்பட்டிருந்தார் . விழாவிற்கு வந்த ஜெயலலிதா அருணாவிற்கு விலை மதிப்பில்லா பரிசு ஒன்றை அளித்ததாக கூறும் நளினி , அதனை விட தனக்கு பெரிய பரிசாக இருந்தது அவர் தனது சம்மந்திகளிடம் கூறிய வார்த்தைதான் என்கிறார். அதாவது ஜெயலலிதா , நளினியின் சம்மந்தியை அழைத்து “நளினியை சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள் . அவள் மிகவும் ஸ்ட்ராங்கான பெண். நான் குழந்தைகளை வளர்க்க உதவி செய்கிறேன் என கூறியும் வேண்டாம் என மறுத்து , தனியாக வளர்த்து காட்டியவள்“ என்றாராம் . அந்த வார்த்தைகள்தான் எனக்கு வாழ்க்கையில் விலை மதிப்பில்லா பரிசாக எண்ணுகிறேன் என்கிறார் நளினி .
நளினி - ராமராஜன் பிரிய காரணம் :
நளினி தனது கணவர் ராமராஜனை ஏன் பிரிந்தேன் என்பதை பகிர்ந்துக்கொண்டார். அதில் “ராமராஜன், நன்றாக ஜோதிடம் பார்ப்பார். கல்யாணம் ஆன 4 வருடங்களுக்கு பிறகு பெண்ணும், பையனும் பிறந்தா நாம சேர்ந்திருக்க மாட்டோம். அவங்களை ஹாஸ்டலில் சேர்த்துவிடுவோம். நாம தனியா இருப்போம். இல்லையென்றால், காலப்போக்கில் எனது புகழ் போயிடும்” என்று அவரே கணித்தார்.
”அதெல்லாம் ஒன்னும் ஆகாதுங்க என்று நான் தான் சமரசம் செய்தேன். இல்லம்மா... நம்ம ஜாதகம் அப்படிதான் இருக்கு, என்றார். ஒரு கட்டத்தில், நான் வேண்டுமா, குழந்தைகள் வேண்டுமா எனக்கேட்டார். எனக்கு குழந்தைகள்தான் வேண்டும் என்று கூறி பிரிந்து விட்டோம். ஆனால், எங்கள் பிரிவை அவர் முன்பே கணித்து வைத்திருந்தார். அவர் கூறியதுதான் நடந்தது,’’ என்றார்.