சிரஞ்சீவி சர்ஜா,கன்னடத் திரைப்படங்களில் தோன்றிய நடிகர் ஆவார். நடிகர் குடும்பத்தைச் சேர்ந்த சர்ஜா 11 வருட சினிமா வாழ்க்கையில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அக்டோபர் 2017 இல், நடிகை மேகனா ராஜுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.அவர்கள் 30 ஏப்ரல் 2018 அன்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்,அதைத் தொடர்ந்து 2 மே 2018 அன்று அரண்மனை மைதானத்தில் பாரம்பரிய இந்து திருமண விழா நடைபெற்றது.
6 ஜூன் 2020 அன்று, சர்ஜா மாரடைப்பு காரணமாக காலமானார். அவர் இறக்கும் போது, அவர்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவரது மகன் ராயன் ராஜ், சர்ஜா இறந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு 22 அக்டோபர் 2020 அன்று பிறந்தார்.
சர்ஜாவின் மறைவுக்குப் பிறகு, மேகனா இரண்டாவது திருமணம் குறித்து வதந்திகள் வந்தாலும், அதற்கு அவர் ஒருபோதும் பதிலளிக்கவில்லை. தற்போது, ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார் மேகனா ராஜ்.
மேகனா ராஜிடம் மீண்டும் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "என்னைக் கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு அறிவுரை சொல்ற ஒரு கூட்டம் இருக்கு. நீ உன் மகனோட சந்தோஷமா இருக்கணும்னு சொல்ற ஒரு கூட்டமும் இருக்கு. அப்போ நான் யார் சொல்றத கேட்கணும்?" என்று கூறியுள்ளார். மேலும், "உலகம் என்ன சொன்னாலும் உன் மனதைக் கேள் என்று சிரஞ்சீவி எப்பொழுதும் சொல்வார். இரண்டாம் திருமணத்தைப் பற்றி இதுவரை என்னிடம் நானே அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. சிரஞ்சீவி விட்டுச் சென்றது ஒரு மனிதன் வாழ வேண்டிய வழி. அதனால் நான் நாளை என்ன நடக்கும் என்று நினைப்பதோ அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யோசிப்பதில்லை.” என்று பதிலளித்துள்ளார்.
மேகனா ராஜ் சமீபத்தில் தனது மகன் ராயன் ராஜ் சர்ஜா பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு அக்டோபர் 2020 இல் வேலைக்குத் திரும்பினார். அவரது வரவிருக்கும் திரைப்படமான புத்திவந்த 2 வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். நடன ரியாலிட்டி ஷோவின் நடுவர்களில் அவரும் ஒருவர்.