தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள், நடிகைகளை பற்றி அவ்வப்போது அவதூறாக கூறி சர்ச்சைகளில் சிக்கிககொள்பவர் மீரா மிதுன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்ட சமுதாயத்தினரை அவதூறாக பேசியதால், கைது செய்யப்பட்ட பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமினீல் வெளியான மீராமிதுன் சில படங்களில் நடித்து வருகிறார்.


குளோபல் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் “பேய காணோம்” என்ற பெயரில் படமொன்றை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் பிரதான கதாபாத்திரமான பேய் கதாபாத்திரத்தில் மீரா மிதுன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது.




இந்த படப்பிடிப்பில் நடிகை மீராமிதுன் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்த படப்பிடிப்பில் மீராமிதுன் 6 உதவியாளர்களுடன் பங்கேற்று வந்தார். இந்த நிலையில், படத்தில் மீராமிதுன் இடம்பெறும் முக்கிய காட்சிகள் நேற்று படம்பிடிப்பதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் அனைவரும் தயாராக இருந்த நிலையில், மீராமிதுன் நள்ளிரவில் படப்பிடிப்பில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளார். அவருடன் வந்த அவரது உதவியாளர்கள் 6 பேரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நடிகை மீராமிதுன் படப்பிடிப்பு பற்றி கவலைப்படாமல் மாயமாகி இருப்பது படக்குழுவினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.


இதுதொடர்பாக, படத்தின் இயக்குனர் செல்வ அன்பரசன் கூறியதாவது,


“ இது ஒரு நகைச்சுவையான பேய் படம். 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து, 20 சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்தது. இதற்காக, கொடைக்கானலில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்தி வந்தோம். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. படப்பிடிப்பு முடிய 2 நாட்களே இருந்த நிலையில், திடீரென்று மீராமிதுன் மாயமாகிவிட்டார். அவரின் உதவியாளர்கள் 6 பேரையும் காணவில்லை.




அவர்களின் உடைமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டனர். பேயைத் தேடப்போன நாங்கள் கதாநாயகியை தேட வேண்டியதாகி விட்டது. இத்தனை பேர் உழைப்பை மதிக்காமல், மீராமிதுன் மாயமாகிவிட்டார். இதுபற்றி நடிகர் சங்கத்தில் புகார் செய்ய இருக்கிறோம்.”


இவ்வாறு அவர் கூறினார்.


ஏற்கனவே நடிகை மீராமிதுன் மீது பல்வேறு சர்ச்சைகளும் இருக்கும் நிலையில், தற்போது அவர் படக்குழுவினரை மதிக்காமல் படப்பிடிப்பில் இருந்து பாதியில் இருந்து ஓடியது அனைவருக்கும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளோபல் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் இந்த படத்தை தேனி பாரத், சுருளிவேல் ஆகியோர் தயாரிக்கின்றனர்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண