Meena: நீண்ட வற்புறுத்தலுக்கு பிறகு மறுமணம் செய்ய போகிறாரா நடிகை மீனா? மாப்பிள்ளை இவர்தானா?

இன்னிசை தென்றல் தேவாவின் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியில் மீனா கலந்து கொண்டார்.இந்நிலையில் நடிகை மீனாவின் மறுமணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Continues below advertisement

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்த மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். 

Continues below advertisement

இதனிடையே கணவர் வித்யாசாகர் ஏற்கனவே இருந்த நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.  அதைத்தொடர்ந்து சிகிச்சைப் பலனளிக்காமல் மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 28 ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் மறைவு திரையுலகினர், மீனா ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவரின் இறப்புக்கு பிறகு வெளியே தலைக்காட்டாமல் இருந்த நடிகை மீனா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். 

தோழிகளுடன் தீபாவளி கொண்டாட்டம், வெகேஷன் என இயல்பு நிலைக்கு திரும்பிய மீனா சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டார். இன்னிசை தென்றல் தேவாவின் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியில் மீனா கலந்து கொண்டார். இந்நிலையில் நடிகை மீனாவின் மறுமணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை மீனாவின் குடும்பத்தினர் அவரை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகவும், ஆரம்பத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை மீனா பின்னர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி  மீனா தரப்பில் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. மேலும் அவர் மறுமணம் செய்யப்போகும் நபர் மீனா குடும்பத்திற்கு நீண்ட கால நண்பர் என்றும் கூறப்படுகிறது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola