குழந்தை நட்சத்திரமாக தொடங்கி, இன்று திருமணத்திற்கு பிறகும் பிஸியாக இருக்கும் ஒரே நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த மீனா, தனது மகள் நைனிகாவையும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். 


எடுத்த எடுப்பிலேயே விஜய் உள்ளிட்ட பிரபலங்களுடன் நடித்த அக்குழந்தை, இன்றும் சினிமாவில் குழந்தை நட்சத்திர தேர்வில் முதலிடத்தில் உள்ளார். மகிழ்வாக, நிறைவாக போய் கொண்டிருந்த நடிகை மீனாவில் வாழ்கையில், திடீரென புயல் வீசியது. அவரது அன்பு கணவர் வித்யாசகர். புற்றுநோய் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் சிகிச்சையில் இருந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி காலமானார். 






மீனாவை மட்டுமல்லாமல், அவரது ரசிகர்களுக்கும் இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்பாராத இந்த துக்கத்திலிருந்து மீனா விடுபட தவித்தார். குழந்தையோடு அவர் கடும் துன்பத்தை சந்தித்த நிலையில், அவரது சினிமா துறை நண்பர்கள் பலரும் ஆறுதலாக இருந்தனர். குறிப்பாக கலா மாஸ்டர், ராதிகா, ரம்பா உள்ளிட்டோர் மீனா தேற்றிக் கொண்டு வர பெரிதும் பாடுபட்டனர். அதன் விளைவாக வீட்டில் அடைந்து கிடந்த மீனா, அதன் பின் தன் தோழிகள் வீடுகளுக்கு வரத் தொடங்கினார். சமீபத்தில் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். 






இதற்கிடையில், தற்போது புதிதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீனா. உடல் எடை குறைத்து, மாடர்ன் உடையோடு லிப்ட் ஒன்றில் நின்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ, ‛வாவ்... மீனாவா இது...’ என்பதைப் போல உள்ளது. அத்தோடு நிற்கவில்லை அவர், அந்த வீடியோவுக்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷன் அதை விட மாஸ்.


‛‛தாமதமான இலக்கணம்... அலங்காரத்தில்’ என்று அந்த வீடியோவுக்கு அவர் கேப்ஷன் கொடுத்துள்ளார். முழுவதும் சோகத்திலிருந்து மீண்டு வந்துள்ள மீனா, பழைய படி சினிமாவில் ஆர்வம் காட்டி, இன்பமான வாழ்வை தொடங்க ரசிகர்கள் பலரும் வாழ்த்துகின்றனர்.