நடிகை மனிஷா கொய்ராலாவின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.


மனிஷா கொய்ராலா


நேபாளத்தை பூர்வீகமாகக் கொண்ட நடிகை மனிஷா கொய்ராலா பாலிவுட், கோடிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழில் மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். கிட்டதட்ட 30 ஆண்டுகளில் 100 படங்களுக்கும் மேலாக நடித்துள்ள இவருக்கு தற்போது 53 வயதாகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபரான சாம்ராட் தஹாலை திருமணம் செய்துகொண்டார்.


இதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் அவருடன் விவாகரத்துப் பெற்றார். புற்றுநோயினால் பாதிக்கப் பட்ட மனிஷா திரைப்படங்களில் இருந்து சில காலம் விலகி இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தேர்வு செய்து கதைகளில் நடித்து வருகிறார். தற்போது தனது வாழ்க்கைப் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது பதிவு ஒன்று கவனத்தை ஈர்த்து வருகிறது.


53 வயதில் வாழ்க்கை நன்றாக இருக்கிறது






இந்த பதிவில் அவர் “ இப்போது எல்லாம்  நான் என்ன செய்கிறேன் என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். நான் விரும்பும் நிறைய விஷயங்களை செய்து வருகிறேன்.  சில சமயங்களில் எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதும் கூட செய்கிறேன். என் பூனைகள் மற்றும் நாய்களுடன் ஓய்வெடுப்பேன் அல்லது புத்தகம் வாசிக்கிறேன் ,  பாடுவது, நடனம் கற்றுக்கொள்வது, இயற்கையை ரசித்தபடி ஒரு நடைபயணம் செல்வது , ஜிம்மிங் செல்கிறேன். 


 30 ஆண்டுகளுக்குப் பிறகு 100 படங்களுக்குப் பிறகு எனக்கான நேரம் எனக்கு  கிடைத்திருக்கிறது. கடவுளின் கிருபையால், நல்ல மனிதர்கள் என்னைச் சுற்றி இருக்கிறார்கள், அவர்களின் அன்பிலும் அக்கறையிலும் நான் திளைக்கிறேன்.. என் வாழ்க்கையின் பெரும்பகுதியை ஒரு பரபரப்பான நகரத்தில் தனியாக வாழ்ந்தேன். ஒருவர் பல ஏற்ற தாழ்வுகளை சந்திக்க வேண்டும், நல்லவர்கள் , கெட்டவர்கள்,  நல்ல ஊடகங்கள் , வதந்திகள் என என்னைச் சுற்றி எல்லாமும் இருந்தன.


சில நேரங்களில் நமக்காக யாரும் ஆதவுக்கு இருக்க மாட்டார்கள் என தெரிந்து இந்த துறையில் நான் போராடி இருக்கிறேன். உண்மையாக இப்போது திரும்பி பார்க்கும் போது நான் இதை எல்லாம் எப்படி செய்தேன் என்று தெரியவில்லை நான் இளையவனாக இருந்ததால், உலகத்தையே ஒரு கை பார்க்க வேண்டும்   என்கிற வைராக்கியம் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.


இந்த நினைவுகள் என் மனதில் என்றும் அழியாத பொக்கிஷங்கள். வாழ்க்கை, நல்லது கெட்டது, சந்தோஷம் மற்றும் சோகம் என எல்லாம் நிறைந்ததாக இருந்திருக்கிறது. நீங்கள் இப்போது பார்ப்பது போல், நான் மிகவும் அமைதியாக இருக்கிறேன். முன்பை வித இன்னும் பொறுமையாகவும் பெரிய அதிர்ச்சிகள் ஏதும் இல்லாமல் நிதானமாக இருக்கிறேன். எந்த விஷயம் என்றாலும் அதைப்பற்றி முழுமையாக சிந்தித்து முடிவெடுத்து ஒரு முழுமையான வாழ்க்கையை உருவாக்குகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.


என்னதான் இருந்தாலும் ஒரு காலத்தில் கனவுக்கன்னியாக கொண்டாடப்பட்ட அவரின் இன்றைய நிலையில் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியையே கொடுத்து வருகிறது.