Actress Lakshmi Menon: தேடிய ரசிகர்கள்... ஒர்க் அவுட் மோடில் இன்ஸ்டாவில் ஹாய் சொன்ன லட்சுமி மேனன்!
முன்போல் அல்லாமல், இடைவெளி எடுத்து படங்களில் நடித்து வரும் நடிகை லட்சுமி மேனன், தன் இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் பகிர்ந்து தன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

மலையாளத் திரையுலகில் இருந்து கோலிவுட்டுக்கு வந்து ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தவர்களில் முக்கியமானவர் நடிகை லட்சுமி மேனன்.
மல்லுவுட் டூ கோலிவுட்
கோலிவுட்டில் இவர், நடிகர் சசிகுமாருடன் ’சுந்தரபாண்டியன்’ படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து, பிரபல இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் இவர் நடித்த ‘கும்கி’ படம் மிகப்பெரும் வெற்றிப் பெற்றது.
Just In




அதனைத் தொடர்ந்து 2013ஆம் ஆண்டு முதல் இவர் நடித்த பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா படங்களும் பெரும் வெற்றி பெற்றன. நடிகர் அஜித்தின் தங்கையாக இவர் நடித்த வேதாளம் படமும் மாபெரும் ஹிட் அடித்தது.
ரசிகர்கள் கவலை...
முன்னதாக இவர் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ’புலிக்குத்தி பாண்டி’ , ஏஜிபி ஸ்கிசோஃபெர்னியா ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
எனினும், தற்போது நல்ல கதாப்பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் லட்சுமி மேனன் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் முன்பு போல் இவரை அடிக்கடி பெரிய திரையில் காண முடியாத இவரது ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் உரையாடல்
எனினும் தன் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையிலும், அவர்களுடன் உரையாடும் வகையிலும் தொடர்ந்து தன் இன்ஸ்டா பக்கத்தில் லட்சுமி மேனன் ஆக்டிவாக உள்ளார்.
அந்த வகையில் முன்னதாக ஒர்க் அவுட் உடையில், தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை லட்சுமி மேனன் தன் ஸ்டோரியில் பகிர்ந்து தன் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.
விரைவில் பிரபுதேவாவுடன் இவர் நடித்துள்ள ’யங் மங் சங்’ திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.