பொதுவாக நடிகைகள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் டயட் , உடற்பயிற்சி என வகை வகையான புகைப்படங்களை ஷேர் செய்வார்கள். குறிப்பாக பாலிவுட் நடிகைகள் என்றால் சொல்லவா வேண்டும். ஆனால் கரினா கபூர் மட்டும் சற்று வித்தியாசமானவர் . வழக்கமான பிரியாணி , ஹல்வா என கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை விரும்பி சாப்பிடுவார். அதிலும் கரீனா ஒரு தீவிர பிரியாணி ரசிகை. இது அவரை பின்பற்றுபவர்களுக்கு நன்றாகவே தெரியும்.





கரீனா கபூருக்கு வாய்ப்புகள் தற்போது குறைந்து வருவதை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது. குழந்தை பிறந்த பிறகு உடல் எடை அதிகரித்த கரீனா அதை ஸ்போர்ட்டிவாகவே அணுகுகிறார். என்றாலும் கூட தனது உடல் நலன் கருதி தற்போது பிரியாணிக்கு பை-பை சொல்லிவிட்டு  மீண்டும் டயட் , யோகா என களமிறங்கியிருக்கிறார்.







கரீனா கபூர் தற்போது பகிர்ந்திருக்கும் ராஜ்மா சாலட் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த அவர் “நான் பிரியாணி மற்றும் ஹல்வா மட்டும் சாப்பிடுவதில்லை. நல்லா சாப்பிடுங்கள் “ என கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.




சாலட் ரகசியம் :


கரீனா கபூர் தற்போது பகிர்ந்திருக்கக்கூடிய சாலட்டில் ஏராளமான நன்மைகள் புதைந்து கிடக்கின்றன. முக்கிய பொருட்களாக சில காய்கறிகளும் , சில பீன்ஸ்களையும் பார்க்க முடிந்தது. இது தவிர சில துண்டுகள்  வெள்ளரிக்காய், கேப்சிகம், செர்ரி தக்காளி மற்றும் கொத்தமல்லி இலைகள் சாலட்டை நிறைத்திருக்கின்றன. பொதுவாக சாலட்டில் பன்னீர் கட்டிகளை சேர்த்து உண்பார்கள். ஆனால் கரீனா இதில் அதை தவிர்த்திருக்கிறார். இதோடு உப்பும் மிளக்கும் சுவைக்காக சேர்த்துவிட்டால் கரீனாவின் ராஜ்மா சாலட் தயார். இந்த சாலட்டை எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் வயிறு நிறைவாக உணரும் . மேலும் கலோரிகளை குறைத்து, ஒரே பவுளில் அதிக அளவிலான சத்துக்களை ஒருங்கே நீங்கள் பெற முடியும் . பிரியாணியில் இருந்து சாலட் மாறும் பிளான் இருந்தால் கரீனாவின் இந்த சாலட்டை முயற்சித்து பாருங்களேன் !