நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது. மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்தப்படத்தின் பின்னணி வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் முன்னதாக தொடங்கிய நிலையில் அண்மையில் படத்திலிருந்து, ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்கல் வீடியோவாக, அரபிக்குத்து பாடல் வெளியிடப்பட்டது.
யூட்யூபில் வெளியான இப்பாடல், 170 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சக்கைப்போடு போட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியான இப்பாடல் 24 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புது சாதனை ஒன்றையும் படைத்தது.
இந்த பாடலுக்கு சமந்தா முதல் குட்டி குழந்தை வரை நடனமாடிய வீடியோக்கள் வைரலானது. அந்த வரிசையில் இப்போது டோலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக இருக்கும் க்ரித்தி ஷெட்டி, அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில், பாலா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்த நிலையில், இந்தப்படம் குறித்த சில சுவாரஸ்சிய தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. அந்த தகவல்களின் படி, சூர்யா இந்தப்படத்தில் காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க க்ரித்தி ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கோலிவுட்டில் எண்ட்ரி தர இருக்கிறார் க்ரித்தி ஷெட்டி
இந்த கதாபாத்திரத்திற்கான ஹோம் வொர்க்கில் சூர்யா இறங்கிவிட்டதாகவும், இந்தப்படத்திற்காக மதுரையில் செட் போடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சூர்யா இதில் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இந்தப்படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறதாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்