3 பிள்ளைகள் இருப்பது தெரிந்து தான் என் கணவர் செந்தாமரையை திருமணம் செய்துக் கொண்டேன் என நடிகை கௌசல்யா நேர்காணல் ஒன்றில் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். 

Continues below advertisement

அந்த நேர்காணலில் பேசிய அவர், “செந்தாமரை காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருந்தார். கருணாநிதிக்கு அவரைப் பற்றி அண்ணா ஒரு கடிதம் எழுதி அனுப்பினர். கலைஞர் எம்ஜிஆருக்கு ஒரு கடிதம் எழுதி சிபாரிசு செய்தார். எம்ஜிஆர் நாடக மன்றத்திற்கு வந்த நிலையில் நாங்க மும்பை சென்று விட்டு ஊர் திரும்பியிருந்தோம். அந்த நாடக மன்றத்தில் அன்றைக்கு ஒருவர் வரவில்லை என்பதால் செந்தாமரை இரண்டாவது ஹீரோவாக நடித்தார். 

அதேசமயம் நான் நடிக்க வந்தது மிகப்பெரிய பிரச்னையாகும். எங்க அம்மா, அண்ணனுக்காக படம் எடுக்க வந்த இடத்தில் நான் மாட்டிக் கொண்டேன். அந்த படம் ரிலீஸ் செய்யாமல் அம்மா விட்டு விட்டார். நான் திருடாதே என்ற படத்தின் மூலம் நடிக்க வந்தேன். நாங்கள் அண்ணன், தங்கச்சியாக தான் எம்ஜிஆர் நாடக மன்றத்தின் நாடகத்தில் முதன் முதலில் நடித்தோம். 

Continues below advertisement

எங்களுடைய திருமணம் கலாட்டாவாக இருந்தது. நாடக மன்றத்தில் இருந்தபோது எங்கள் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடிக்காது. இருந்தாலும் திருமணம் செய்துக் கொண்டோம். அதன்பிறகு இருவரும் ஒற்றுமையாக இருந்தோம். ஆர்.ஆர்.லதா என்பவர் தான் எங்கள் இருவரையும் சேர்த்து வைத்தார். எங்கள் திருமணத்திற்கு முன்பே அவருக்கு ஒரு திருமணம் நடைபெற்றிருந்தது. 

ஆனால் அந்த மனைவி இறந்து 5 ஆண்டுகளாகி இருந்தது. ஒருவேளை உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் திருமணம் செய்திருக்க மாட்டேன். அவர்களுக்கு 3 குழந்தைகள் இருந்தார்கள். அவர்களுடன் சேர்த்து நான்காவதாக குழந்தையாக என்னையும் வளர்த்தார். அப்போது எனக்கு புரிதலே இருக்காது. 17 வயது தான் ஆகியிருந்தது. கணவர் சொன்னதை செய்வேன். என்னை 6 மாதம் அவருக்கேற்ற மாதிரி மாற்றிக் காட்டினார். 

Also Read: Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்

என் கணவர் செந்தாமரையை படாதபாடு படுத்தினேன். ஏற்கனவே 3 குழந்தைகள் வளர்ந்திருந்ததால் என் டார்ச்சரை பொறுத்துக் கொண்டார். நாங்கள் இருவரும் 29 ஆண்டுகள் ஒன்றாக இருந்தோம். என் அம்மா மாதிரி நன்றாக பார்த்துக் கொண்டதால் எனக்கு அவரை ரொம்ப பிடித்து விட்டது. என் பெயரைக் கூட சொல்ல மாட்டார். என்னை மக்கு, அம்மா என சொல்வார். காரணம் கேட்டால் சிரித்துக் கொண்டே பதில் சொல்ல மாட்டார். மரியாதைக்குறைவாக பேச மாட்டார். 

படத்தில் வில்லத்தனம் செய்வாரே தவிர, நிஜத்தில் ரொம்ப சாந்தமானவர். அவருடன் பழகியவர்களுக்கு நன்றாக தெரியும். கஷ்டம் என யாராவது வந்தால் என்னிடம் இவ்வளவு தான் இருக்கிறது என இருப்பதை வெளிப்படையாக சொல்லி கொடுப்பார்” என நடிகை கௌசல்யா கூறியுள்ளார்.