தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்த குற்றச்சாட்டில் திமுக எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை போலீசார் தேடி வந்த நிலையில், அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ பேட்டி அளித்தார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
முன்ஜாமின்:
ஆதாரமில்லாமல் அரசியலுக்காக தொடரப்பட்ட வழக்கு என்ற வாதத்தை ஏற்று முன் ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம். திமுக மீது களங்கம் சுமத்துவதற்காகப் பயன்படுத்திய ‘ஆட்சியைக் கவிழ்க்க’ என்ற வார்த்தையை நீக்கி பின்வாங்கிய தவெக அரசு.
இன்று சென்னை உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் ஆகியோர்க்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கியிருக்கிறார்கள். ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா தன்னிடம் ஒரு நபர் ‘நீங்கள் சட்டமன்றத்தில் சபாநாயகர் மீது ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும்போது அதற்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.
யோசித்து புகார்:
உங்க கொறடா என்ன சொன்னாலும் அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டும். அப்படி வாக்களித்தால் உங்களுக்கு நாங்கள் முப்பத்தைந்து கோடி ரூபாய் தருகிறோம்’ என்று சொல்லி ஒரு புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் எங்கள் தரப்பு வாதாடும் போது முன்வைத்தது, 26 ஆம் தேதி ஜூன் மாதம் ஏறக்குறைய இரவு பத்து மணிக்கு அந்த தொலைபேசி அழைப்பு வந்ததாக பெயர் குறிப்பிட்டு இருந்தாங்க. ஆனா இருபத்தி ஒன்பதாம் தேதி வரைக்கும் அந்த சட்டமன்ற உறுப்பினர் அது குறித்து எந்த புகாரும் யாரிடமும் தரவில்லை. இரண்டு நாட்களாக எப்படி புகார் அளிக்கலாம் என்னென்ன வார்த்தைகளை பயன்படுத்தலாம் என யோசித்து புகாரை உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள்.
நாங்க எடுத்து சொன்னது செந்தில்பாலாஜி அவர்களோ இல்லை, அவர்களின் தம்பி அசோக்குமாருக்கும் இதில் தொடர்பு என நேரடியான சாட்சியங்கள் எதுவும் இல்லை. எல்லாருமே காவல்துறையினர்கிட்ட கொடுக்கப்பட்ட நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படாத, அனுமதிக்கப்படக் கூடாத ஒரு ஒப்புதல் வாக்குமூலம்.
சாட்சியம் இல்லை:
அதில்தான் இவங்க பெயர் எல்லாம் எழுதி எடுத்துட்டு வந்திருக்காங்க. முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக செய்துள்ளரகள் என கூறினோம். அரசு தரப்புல என்ன சொன்னாங்கன்னா, ஒரு நாள்ல திருநாவுக்கரசும், செந்தில்பாலாஜி அவர்களும் ஒரே நாள்ல ஈரோட்டுல இருந்திருக்காங்க. ஒரு இடத்துல இல்ல. இரண்டு பேரும் ஒரே நாளில் ஈரோட்டுல இருந்திருக்காங்க என்பது தான் அதை தவிர அவங்ககிட்ட எந்த சாட்சியமும் இல்ல.
முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், செந்தில் பாலாஜி குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது களங்கம் விளைவிக்கும் வகையில். நேற்று வரைக்கும் அரசுத் தரப்பில் இருந்து அரசைக் கவிழ்க்கும் எண்ணத்தோடு இது செய்யப்பட்டது அப்படின்னு சொல்லிக்கிட்டே வந்தாங்க.
அரசை கவிழ்ப்பதா?
அப்படியே செய்திகளும் வெளியிட்டன. ஆனால் சபாநாயகரை அனைத்து கட்சியும் இணைந்து தான் தேர்ந்தெடுத்தது. அப்படியே சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துல வாக்களிப்பது என்பது Automatic ஆ stopping the government ஆகாது. அதனால் அரசை கவிழ்க்க முடியாது.
நாங்க சபாநாயகர் தேர்தல்ல ஆதரிச்சு ஒருமித்த கருத்தோடு தான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்படி இருக்கும் போது அரசை கவிழ்க்கறதா சொல்வது எல்லாம் புகார்ல அவங்களே எழுதி கொண்டது. அந்த புகார்லயே வந்து அந்த திருநாவுக்கரசு அரசை கவிழ்க்கனும்னு எங்கேயும் சொன்னதாக தகவல் இல்லை.
ஆனால் காவல் துறையினரும், அரசு செய்திக்குறிப்புகளிலும் அரசை கவிழ்க்கும் என்ற வார்த்தையை சேர்த்து எழுதிக்கிட்டே வந்தாங்க. இதை நாங்க நேத்து principle செஷன்ஸ் கோர்ட்டில் எடுத்து வாதிட்ட உடனே இன்று செந்தில் பாலாஜிக்கும், அசோக்குமாருக்கும். ஜாமீன் மனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட counter affidavit இல் அரசை கவிழ்க்க வேண்டும் என்ற வார்த்தையை நீக்கி விட்டார்கள்.
அப்ப அந்த மொத்த முதல் தகவல் அறிக்கையுமே நீர்த்து போய். சொல்லப்பட்ட எந்த குற்றச்சாட்டுக்கும் ஆதாரங்களே இல்லாம இருப்பதால் நீதிமன்றம் எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு நிபந்தனை ஜாமீன் கொடுத்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
