Kiran Rathod: பணத்துக்காக தான் அப்படி ஒரு படத்தில் நடித்தேன்.. ஓபனாக பேசிய நடிகை கிரண்

சில காலம் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் இருந்த கிரண் மீண்டும் ஆம்பள, முத்தின கத்திரிக்கா, சகுனி என சில படங்களில் நடித்தார்.

Continues below advertisement

பிற நடிகைகள் பிகினி உடை அணிந்து புகைப்படம் பதிவிடும்போது என்னை மட்டும் குறிவைத்து செய்தி வெளியாகிறது என நடிகை கிரண் நேர்காணல் ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளார். 

Continues below advertisement

தமிழ் சினிமாவில் வட நாட்டு நடிகைகளுக்கு என்றுமே மவுசு அதிகம் இருக்கும் நிலையில் தன்னுடைய அப்பாவித்தனமான நடிப்பால் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் கிரண். விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து அஜித்குமார் நடித்த வில்லன், பிரஷாந்துடன் வின்னர், கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம், விஜயகாந்த் நடித்த தென்னவன் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். விஜய் நடித்த திருமலை படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். 

இதனைத் தொடர்ந்து சில காலம் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் இருந்த கிரண் மீண்டும் ஆம்பள, முத்தின கத்திரிக்கா, சகுனி என சில படங்களில் நடித்தார். அப்படி அவர் 2016 ஆம் ஆண்டு இளமை ஊஞ்சல் படத்தில் நடித்தார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற கிரணிடம், இந்த படத்தில் நடித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு, “பணத்திற்காக தான் அந்த படத்தில் நடித்தேன். அப்படத்துக்காக மிகப்பெரிய சம்பளம் பேசப்பட்டது. நமீதா கூட அந்த படத்தில் இருந்தார். இளமை ஊஞ்சலில் நடித்த நடிகைகள் எல்லாம் சிறந்த தேர்வாக இருந்தது. நான் அப்படத்தில் நடிக்கும்போது உற்சாகமாக இருந்தேன். காரணம் முழுக்க முழுக்க பெண்கள் பற்றிய கதை என்பதால் அவர்களுடன் பயணம் மேற்கொள்வது போல இருந்தது. ஒகேனக்கல் அருவியில் படப்பிடிப்பு நடந்தபோது மிகப்பெரிய வேடிக்கையான சம்பவங்கள் நடந்தது. 

மேலும் நான் தமிழ்நாட்டில் இல்லை. ஆனால் என்னை பற்றி தொடர்ந்து செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. நான் 3 முறை திருமணம் செய்து விட்டேன், 3 குழந்தைகள் இருக்கின்றனர் என்றெல்லாம் செய்தி வெளியிட்டு விட்டனர். அதனால் தான் நேர்காணல்களில் பங்கேற்க தொடங்கினேன். நான் நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்பது பற்றி கவலைப்பட மாட்டேன். நான் திரும்ப வந்து சொல்லும் வரை அவர்கள் என்ன எழுதினாலும் அது சரியாகிவிடாது. 

அதேபோல் சமூக வலைத்தளங்களில் ஏராளமான ஹீரோயின்கள் பிகினி அணிந்து புகைப்படம் வெளியிடுகிறார்கள். ஆனால் ஊடகம் என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள்? அது என்னுடைய உடல், என்னுடைய ஆடை. இப்படி என்னை டார்கெட் செய்வது ரொம்ப கஷ்டமா இருக்கிறது. அதை வெளிப்படுத்த எனக்கு விருப்பமில்லை” என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க: Siragadikka Aasai :திருடிய பணத்தை திருப்பி கொடுத்த சத்யா... ருத்ர தாண்டவம் ஆடப்போகும் விஜயா? - சிறகடிக்க ஆசையில் இன்று!

Continues below advertisement
Sponsored Links by Taboola