Maruti Suzuki Offer: மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ்யுவி கார் மாடல்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.


மாருதி சுசுகி நிறுவனம்:


இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, கடந்த சில மாதங்களாக மிகவும் கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ஜிம்னி, கிராண்ட் விடாரா மற்றும் ஃப்ரான்க்ஸ் போன்ற சில பிரபலமான மாடல்களுக்கு பல தள்ளுபடிகள் உள்ளன. விற்பனையாகாத MY2023 Nexa மாடல்களின் கையிருப்பு அதிகமாக இருப்பதால், அவற்றின் விற்பனையை ஊக்குவிக்க இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன. 


பெருமளவிலான மாருதி டீலர்கள் கணிசமான அளவு விற்கப்படாத MY2023 கார் மாடல்களை கைவசம் வைத்துள்ளனர். இது ஒரு சில குறிப்பிட்ட பிராந்தியங்களில் மட்டுமின்றி,  நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களில் நீடிக்கிறது. எனவே, அதிக அளவு விற்பனையாகாத கையிருப்புடன், டீலர்கள் பணப்புழக்கச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். புதிய MY2024 மாடல்களை வாங்குவதற்கு பணம் இல்லாததால்,  பெரும்பாலான மாருதி MY2023 மாடல்களை மிகவும் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் விற்பனை செய்ய தீவிரம் காட்ட் வருகின்றனர். 


இதையும் படிங்க: Hyundai Creta N Line: மார்ச் 11ல் வருகிறது ஹுண்டாய் கிரேட்டா என் லைன் கார் - முன்பதிவு எப்போது? விலை எவ்வளவு?


மாருதி நெக்ஸா பிப்ரவரி 2024 சலுகைகள்



  • விற்பனையாகாத MY2023 கிராண்ட் விட்டாரா ஹைப்ரிட் மற்றும் Fronx இன் டர்போ-பெட்ரோல் யூனிட்கள் முறையே ரூ.79,000 மற்றும் ரூ.83,000 நன்மைகளுடன் கிடைக்கின்றன. அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளதைத் தாண்டி, விற்பனையை மேலும் ஊக்கப்படுத்த மாருதி டீலர்கள் அனைத்து மாடல்களுக்கும் சுமார் ரூ.50,000 கூடுதல் பணத் தள்ளுபடியை வழங்குகின்றனர். இதன் மூலம்,  கிராண்ட் விட்டாரா மற்றும் ஃபிராங்க்ஸின் வகைகளில் பயனாளர்கள் குறைந்தபட்சம் ரூ.1.30 லட்சம் வரையிலான சலுகைகளை பெறலாம்.

  • இக்னிஸ் மற்றும் சியாஸின் MY2023 யூனிட்கள் முறையே ரூ.61,000 மற்றும் ரூ.48,000 தள்ளுபடியுடன் அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளன. இருப்பினும், இரண்டு மாடல்களும் பெரும்பாலான இடங்களில் தள்ளுபடியில் ரூ. 1 லட்சத்திற்கு மேல் இருப்பதை தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. 

  •  அதேநேரம், MY2023 ஜிம்னி கார் மாடல்களுக்கான அதிக பலன்கள் தொடர்கின்றன. 1.50 லட்சம் உத்தியோகபூர்வ தள்ளுபடிகள் தவிர, மாருதி சுஸுகி ஜிம்னி விற்பனையை அதிகரிக்க தண்டர் பதிப்பின் விலையை தற்காலிகமாக குறைத்தது. தண்டர் எடிஷன் சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளதை விட 50,000 ரூபாய் தள்ளுபடியை டீலர்கள் வழங்குகின்றனர். இருப்பினும், MY2023 ஜிம்னியின் பங்குகள் குறைவாகவே கையிருப்பில் உள்ளன.  காரணம பெரும்பாலான தள்ளுபடி யூனிட்கள் வாங்குபவர்களால், பதிவு செய்யப்பட்டு, உண்மையான அறிமுக விலையை விட சுமார் ரூ. 3.5 லட்சம் குறைவாக பெறப்பட்டுள்ளன.  


 


Car loan Information:

Calculate Car Loan EMI