தமிழ் சினிமாவின் உயர்ந்த நடிகர், கிராமத்து மண்வாசனைக்கு ஏற்ற முகம், நயவஞ்சகமான வில்லன் என பல ஆங்கிள்களில் கொண்டாடப்பட்ட ஒருவர் நடிகர் நெப்போலியன். குறுகிய காலகத்திலேயே முன்னணி நடிகர் அந்தஸ்த்தை பெற்ற நடிகர் நெப்போலியன் சில நாட்களுக்கு முன்னர் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். 



கிராமத்து நடிகன் :


"புது நெல்லு புது நாத்து" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அதை தொடர்ந்து கிராமத்து கதை சார்ந்த படங்களான எஜமான், சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா, கிழக்கு சீமையிலே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் நடிகர் நெப்போலியன். பிரபலமான நடிகராக இருந்து வந்தவர், பின்னர் அரசியலில் குதித்தார்.


திமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அவர்,  திடீரென குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலானார். அவரின் மூத்த மகன் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றவர் அங்கேயே செட்டிலாகிவிட்டார். அவர் சொந்தமாக IT கம்பெனி ஒன்றை அமெரிக்காவில் நடத்தி வருகிறார். 


இறுதியாக ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான 'அன்பறிவு' திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகர் நெப்போலியன். அந்த வகையில் நடிகர் நெப்போலியனின் 60வது பிறந்தநாளை சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்து இருந்தார். 


 



 


60வது பிறந்தநாள் :
 


நெப்போலியனின் பிறந்தநாள் விழாவுக்கு சர்ப்ரைஸாக நடிகை குஷ்பூவும் நடிகை மீனாவும் என்ட்ரி கொடுத்து பிறந்தநாள் பார்ட்டியை சிறப்பித்தனர். மேலும் பிரபல யூடியூபர் இர்ஃபானும் இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த பிறந்தநாள் பார்ட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. 



வைப் செய்த குஷ்பூ - நெப்போலியன் :


'எட்டுப்பட்டி ராசா' படத்தில் நடித்த குஷ்பூவும், எஜமான் படத்தில் நடித்த மீனாவும் நெப்போலியன் பிறந்தநாள் விழாவுக்கு வருகை தந்தது அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது. மேலும் 'எட்டுப்பட்டி ராசா' படத்தில் இடம்பெற்ற மிகவும் பிரபலமான பாடலான 'பஞ்சு மிட்டாய் சேலை கட்டி' பாடலுக்கு நெப்போலியனும்  குஷ்பூவும் சேர்ந்து மேடையில் ஆடிய டான்ஸ் வீடியோவை யூடியூபர் இர்ஃபான் தனது அபிஷியல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சோசியல் மீடியாவில் வெளியான இந்த வீடியோ வைரலாகி  வருகிறது.     






'பஞ்சுமிட்டாய்...' பாடலுக்கு 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நெப்போலியன் பிறந்தநாள் அன்று வைப் செய்தது அந்த விழாவில் கூடியிருந்த அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது. திரை ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு ஹார்ட்டீன்களை பறக்க விடுகிறார்கள். 


ALSO READ | Premalatha Vijayakanth: ’பொருளாளர் - பொதுச்செயலாளர்’ பிரேமலதா விஜயகாந்த் அரசியல்வாதியான கதை..!