குழந்தை நட்சத்திரமாக கடந்த 2000 ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படம் நாயகியாக அறிமுகமானார். பிறகு தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் படம் மூலம் இயக்குநர் ஏ.எல்.விஜய், கீர்த்தி சுரேஷை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான, நடிகையர் திலகம் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதும் இந்த படம் வாங்கிக்கொடுத்தது.
திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது கைவசம் பல படங்களை வைத்துள்ளார். விளம்பர படங்கள், அவ்வபோது போட்டோஷூட் போன்றவற்றை செய்து சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார். மேலும் அவ்வப்போது துணிக்கடை திறப்பு போன்ற விழாக்களிலும் கலந்துக் கொள்கிறார். சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் கிண்டலுக்கு உள்ளானது.
கிண்டல் ஒரு பக்கம் இருந்தாலும் கீர்த்தியின் ரியாக்ஷனை க்யூட் என பதிவிட்டு சோஷியல் மீடியாவில் வைரலாக்கும் அவரது ரசிகர்களும் உண்டு. அப்படியான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டப்பிங் ஒன்றில் கீர்த்தி விழுந்து விழுந்து சிரிக்கும் காட்சியும், டப்பிங்கில் அழும் காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. குலுங்கி குலுங்கி கீர்த்தி சுரேஷ் சிரிக்கும் வீடியோவை ஷேர் செய்துள்ள பலரும் க்யூட் சிரிப்பு என பதிவிட்டுள்ளனர்.