Kannagi Movie: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் ட்ரெய்லர் வரை.. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகும் “கண்ணகி”

ஸ்கை மூன் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள கண்ணகி படமானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் ட்ரெய்லர் வரை ரசிகர்களை கவர்ந்தது.

Continues below advertisement

நடிகை கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கண்ணகி’ படம் நாளை வெளியாகும் நிலையில் அப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

யஹ்வந்த் கிஷோர் இயக்கியுள்ள ‘கண்ணகி’ படம் நாளை (டிசம்பர் 15) தியேட்டரில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஹாலினி, மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ராம்ஜீ ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சரத்குமார் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். கார்த்திக் நேத்தா கண்ணகி படத்துக்கான பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

ஸ்கை மூன் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள கண்ணகி படமானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் ட்ரெய்லர் வரை கவர்ந்த நிலையில் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

கலை , நேத்ரா, நதி , கீதா ஆகிய நான்கு பெண்களை மையப்படுத்தி தான் கண்ணகி படம் உருவாகி இருக்கிறது. வெவ்வேறு பொருளாதார சூழலை சேர்ந்த இந்தப் பெண்கள் தங்களது வாழ்க்கையில் வெவ்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். கட்டாயத்தின் பேரில் திருமணம், எதிர்பாராத கருத்தரிப்பு, விவாகரத்து, திருமணம் செய்துகொள்ளாததால் எதிர்கொள்ளும் அவதூறுகள் என பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இவர்கள் தங்களது விருப்பத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் சமூகத்துடன் தங்களது குடும்பத்துடன் போராடுகிறார்கள் என்பது போன்ற காட்சிகள் ட்ரெய்லரில் இடம் பெற்றிருந்தது. 

இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் இயக்குநர் மோகன் ராஜா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் இந்த ட்ரெய்லரை வெளியிட்டனர். மேலும் ஸ்னீக் பீக் காட்சிகளும் வெளியாகி பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டு தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிகுந்த பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தினை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola