தெலங்கானா மாநிலத்தில் துணிக்கடை திறப்பு விழாவிற்காக வந்த நடிகை கீர்த்தி சுரேஷை காண ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
குழந்தை நட்சத்திரமாக கடந்த 2000 ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படம் நாயகியாக அறிமுகமானார். பிறகு தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் படம் மூலம் இயக்குநர் ஏ.எல்.விஜய், கீர்த்தி சுரேஷை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான, நடிகையர் திலகம் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதும் இந்த படம் வாங்கிக்கொடுத்தது.
திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது கைவசம் பல படங்களை வைத்துள்ளார். இந்நிலையில் பல்வேறு விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அவ்வபோது போட்டோஷூட் போன்றவற்றை செய்து சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார். மேலும் அவ்வப்போது துணிக்கடை திறப்பு போன்ற விழாக்களில் கலந்துக் கொள்கிறார். அவர் எங்கு சென்றாலும் அவரது ரசிகர்கள் கீர்த்தி சுரேஷுக்கு மிகுந்த வரவேற்பை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் தெலங்கானா மாநிலம் மஞ்சிரியளா மாவட்டத்தில் துணிக்கடையை திறந்து வைப்பதற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் சென்றுள்ளார். அவரைக் காண்பதற்காக அவரது ரசிகர்கள் பலரும் சென்றிருந்தனர். இந்நிலையில் அங்கு பெருமளவில் கூட்டம் கூடியது. மேளதாளங்கள் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது கொரோனா 3ம் அலை குறித்த அச்சம் மக்களிடம் பரவலாக உள்ளது. கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்ட அந்த விழாவில் அவரது ரசிகர்கள் பலரும் முகக்கவசம் அணியவில்லை.மேலும் சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை. இதையடுத்து அது குறித்த விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதையும் படிக்க:
இந்நிலையில் சிவப்பு நிற புடவையில் அழகு பதுமைபோல் அவர் துணிக்கடைக்கு வந்து அவரது ரசிகர்களை சந்தித்த புகைபடங்களை அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவை பலராலும் பகிரப்பட்டு தற்போது இணையத்தையே கலக்கி வருகிறது.