பத்திரிகையாளரும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவருமாகிய பயில்வான் ரங்கநாதன் வழக்கமாக நடிகர், நடிகைகள் குறித்து சர்ச்சையாக பேசுபவர். தற்போது பெரிதாக எந்த படத்திலும் நடிக்காத பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து வருகிறார். அவர் அளிக்கும் ஒவ்வொரு பேட்டியிலும் ஒரு சினிமா நட்சத்திரத்தின் கிசு கிசு தகவல் கண்டிப்பாக இடம்பெற்று இருக்கும்.
மேலும், சினிமா தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், வில்லங்கமாக கேள்வி எழுப்பி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ஒருவழியாக்குவார் என்று பரவலாக பேச்சு உண்டு. 80களுக்கு முன்பிருந்தே அவர் சினிமாவில் வலம் வருபவர் என்பதால், அப்போதைய சினிமா பிரபலங்களுடன் தனக்கு இருந்த நெருக்கத்தை வைத்து, அவர்கள் பற்றிய தகவல்களை அவ்வப்போது பகிர்வார்.
இந்தநிலையில், சமீபத்தில் நடிகர் ராதிகாவின் தாயார் குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் சேனலில் தரக்குறைவாக பேசியுள்ளார். அந்த வீடியோ மிகப்பெரிய வைரலாகி சர்ச்சைக் குள்ளானது. அதன்பிறகு, நடிகை ராதிகா பயில்வான் ரங்கநாதனை திருவான்மியூர் கடற்கரையில் எதார்த்தமாக பார்த்ததாகவும், அவரை தாறுமாறாக கிழி கிழியென்று கிழித்ததாகவும் தகவல் வெளியானது.
அதற்கு பிறகும் திருந்தாத பயில்வான் ரங்கநாதன், தொடர்ந்து நடிகை கஸ்தூரி, நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என பலரும் குறித்து சமீபத்தில் தவறாக விமர்சித்து பேசியுள்ளார். இதைபார்த்து மனமுடைந்த ரசிகர் ஒருவர் கஸ்தூரியின் ட்விட்டர் பக்கத்தில், உங்களை பற்றி இவர் மோசமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு நடிகை கஸ்தூரி பயில்வான் ரங்கநாதனை நார் நாராக கிழித்து தொங்கவிட்டுள்ளார். அதில், பீயை மிதிக்க கூடாதுன்னு தள்ளி நடக்கிறோம், அது பயம் இல்லை. கண்ட நாயோட எதுக்கு வம்புன்னு பாத்தேன்...இந்த முழு பொய்யனை இனியும் சும்மா விட்டா பெத்த அம்மாவையே கூட தப்பா பேசுவான். Law suit coming up. I request respected journalists & actor community support.
தற்போது இந்த ட்விட்டர் பதிவு வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்