ரஜினிகாந்தின் அடுத்தப்படம் தொடர்பான தகவல்கள் தினம் தினம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவா இயக்கத்தில் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தை அடுத்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. ரஜினி - நெல்சன் - அனிருத் கூட்டணியில் அமையும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியானது.


இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வர இருப்பதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது. அதனை அடுத்து, ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ்(Sun Pictures) தயாரிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார்(Nelson Dilipkumar) இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் இப்படம் உருவாக உள்ளது.


மேலும் படிக்க: Mahaan Movie Review | மகான்... விக்ரம் படமா? துருவ் படமா? கார்த்திக் சுப்பராஜ் படமா? ரீல் பை ரீல் விமர்சனம் இதோ!






இந்தப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் அல்லது மே மாத இறுதியில் தொடங்கும் என்றும், படம் வருகிற டிசம்பர் மாதம் அல்லது அடுத்து வருட ஜனவரி மாதம் திரைக்கு வரும் என்றும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், ரஜினியின் 169வது(Rajini 169) படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானதால் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கியது அடுத்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’(Beast) படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். அடுத்து, ரஜினியை வைத்து இயக்கப்போவதால் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.


இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தை ரசிகர்கள் “தலைவர்169”(Thalaivar 169) என்று அவரது ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். கொரோனா சூழ்நிலைகளை பொறுத்து, 5 முதல் 6 மாதங்களில் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அவரது 170 வது படத்திற்காக இயக்குநர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். 169 ஆவது படத்தை முடிப்பதற்குள் ரஜினிகாந்த் 170  படத்தை தேர்வு செய்வதற்கான வேலைகளை முடித்துவிட திட்டமிட்டிருக்கிறாராம். இந்நிலையில், #Thalaivar169 ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண