இளையராஜா ஒரு இசைக்கடவுள் எனவும் அவரை கோயிலுக்குள் அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது எனவும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மேல்நிலைப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
தமிழக பாரதிய ஜனதா கட்சி உடைய மைய குழு இன்று கூட்டம் நடைபெற்றது .
மாநிலம் முழுவதும் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த உறுப்பினர் சேர்க்கையில் பல லட்சக்கணக்கான உறுப்பினர்கள் இணைந்து உள்ளன. அகில இந்தியாவின் குழு அமைக்கப்பட்டிருக்கிறது மாநிலங்கள் அளவிலும் அதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு மாபெரும் எழுச்சி தரக்கூடிய ஒரு ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல்களிலும் அதனை தொடர்ந்து வரக்கூடிய தேர்தல்ளிலும் பாரதிய ஜனதா கட்சி பெரிய முத்தரையை பதிக்கும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.
2012ஆம் ஆண்டு வாஜ்பாய் பிறந்த நாளை கொண்டாடும் போது அன்று தமிழ்நாட்டில் ஏழை பெண்களுக்கு திருமணத்திற்கு வைப்பு நிதியாக 25 ஆயிரம் ரூபாய் வைக்கப்பட்டது அதுமட்டுமின்றி, அவர்கள் கல்வி செலவு அடங்கும் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 1108 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதனிடையே நடிகை கஸ்தூரி பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இளையராஜா ஒரு இசைக்கடவுள். அவரை கோயிலுக்குள் அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது. அர்த்த மண்டபத்துக்குள் போக வேண்டாம் என்றதும் இளையராஜா போகவில்லை. கோயில் கருவறைக்குள் இளையராஜா என்றில்லை; யாருமே நுழைய முடியாது. திமுகவை வீழ்த்த வேண்டுமானால் ஒருமித்த பெரிய கூட்டணி அமைக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
முன்னதாக, இசைஞானி இளையராஜா நேற்று முன் தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்றார். இளையராஜா கோவிலுக்குள் வருகை தந்து ஆண்டாள் ரெங்மன்னாரை தரிசனம் செய்ய கருவறைக்குள் நுழைந்தார். அப்போது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை கருவறைக்கு வெளியே நிற்குமாறு கூறினார்கள். இதனால் சற்று யோசித்த இளையராஜா சாமி இருக்கும் கருவறையில் இருந்து வெளியே வந்து சாமி தரிசனம் செய்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.