பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 5 ஸ்டார் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கனிஹா. அதன் பிறகு அஜித் நடிப்பில் வெளியான ‘வரலாறு’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கனிகாவிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்திக்கொடுத்தது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருந்தார்.தமிழ் திரையுலகை விட மலையாள் சினிமா இவரை வரவேற்றது. அங்கு முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார். சில காலங்கள் மட்டுமே படங்களில் நடித்த கனிஹா கடந்த 2008 ஆம் ஆண்டு சியாம் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு , குடும்பத்தை கவனித்து வருகிறார்.இவருக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கனிஹா தற்போது பைக் ஓட்டும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது குறித்த போஸ்ட் ஒன்றில் “ எனக்கு எப்போதுமே இது போன்ற பெரிய பைக் ஓட்ட வேண்டும் என ஆசையாக இருக்கும் . ஆனால் அதற்குள்ளாக பயம் வந்துவிடும். இன்று ஒருவழியாக அந்த பயத்தை தூக்கி போட்டுவிட்டேன். இந்த அரக்கனுடன் மகிழ்ச்சியாகவும் திரில்லான அனுபவமாக இருந்தது “ என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தான் ராயல் எண்ஃபீல்டை கற்றுக்கொள்ளும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார் அதில் “இதை கற்றுக்கொள்ள ரொம்ப நேரமெல்லாம் ஆகல, சரியான நேரத்துக்காக காத்திருக்காதீங்க. ஒவ்வொரு நகர்வையும் உங்களுக்கானதாக்குங்க பின் குறிப்பு : வீடியோ எடுப்பதற்காக மட்டுமே நான் ஹெல்மெட் அணியவில்லை” என நேர்மறையான கருத்தை பகிர்ந்திருந்தார்.தனது புல்லட் பைக்கை வெகுவாக நேசித்துவிட்டார் போலும் , அடுத்த நாளை புடவை ஒன்றை கட்டிக்கொண்டு பைக்குடன் போஸ் கொடுத்துள்ளார் கனிஹா.
கனிஹா மதுரையில் பிறந்து வளந்தவர். 39 வயதாகும் நிலையில் , முக்கியமான கதாபத்திரங்களில் மட்டுமே அவ்வபோது தலைக்காட்டி வருகிறார். நடிப்பது மட்டுமல்லாம் விளம்பரங்கள், டப்பிங் , பாடல்கள் என பன்முக கலைஞர் கனிஹா என்பது குறிப்பிடத்தக்கது.