அல்லித்தந்த வானம், ஜெயம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கியவர் கல்யாணி. சிலருக்கு பூர்ணிதா என்றால் பரீட்சியம். சில காலங்களுக்கு பிறகு சின்னத்திரையில் கால் பதித்தார். இவர் நடித்த தாயுமாணவர் என்னும் சீரியல் மிகப்பிரபலம். அதோடு மட்டுமல்லாமல் பீச் கேர்ள்ஸ் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். 2013-ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவரான ரோஹித்தை மணந்தார். தற்போது வெளிநாட்டில் செட்டில் ஆகியுள்ள கல்யாணி அவ்வப்போது சீரியல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக குரல் கொடுத்து வருகிறார்.
கல்யாணி- ரோஹித் தம்பதியருக்கு 2018 ஆம் ஆண்டு நவ்யா என்ற பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் புகைப்படங்களை கல்யாணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். நவ்யா பார்ப்பதற்கு அச்சு அசல் கல்யாணியை ஜெராக் எடுத்தது போலவே உள்ளார் என அவரது ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
நவ்யா என்றால் புதிய தொடக்கம் என அர்த்தம் என்னும் கல்யாணி, தன் கடந்த கால வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியவள் தன் மகள்தான் என பெருமிதம் கொள்கிறார்.மேலும் தற்போது என் மகளால் மறுபிறவியின் மீது நம்பிக்கை கொண்டவளாகிவிட்டேன் என்கிறார் கல்யாணி.