சன் மியூசிக் சேனலில் விஜே-வாக மீடியா வாழ்க்கையை துவக்கிய நடிகை காஜல் பசுபதி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் நர்ஸ் கேரக்டரில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பின்னர் இதயதிருடன், டிஷ்யூம், கள்வனின் காதலி, பெருமாள், மெளனகுரு, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தும், 2017-ல் பிக்பாஸ் ஷோவில் பங்கேற்றதன் மூலமும் ரசிகர்கள் மனதில் இடம்பெற்றார். ஆனால் இவருக்கு 2010-க்கு பிறகு பெரிதாக பேசும்படியான கதாபாத்திரம் கிடைக்கவில்லை. கலகலப்பு 2 திரைப்படத்தில் கொஞ்சம் வெளியில் தெரிந்தாலும் தனது சம்பள குறைப்பினால் இந்த நிலையில் இருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். 



ஆரம்பத்துல எனக்கு ஏத்த வில்லி கதாபாத்திரம் வரணும்ன்னு காத்திருந்தேன், அவங்களே எனக்கு ஏத்த ரோல் வரட்டும்ன்னு சொல்லிருந்தாங்க. அப்புறம் சம்பளம் குறைச்சங்க, நான் அதுல இருந்து இறங்கி வர முடியாது. எனக்கு திமிரு அப்படி, இப்படின்னு எல்லாம் இல்லை, என் கரியருடய வளர்ச்சியே என் சம்பளத்தை வைத்து தான் இருக்கு. அதெப்படி நான் விட்டுக்கொடுக்க முடியும். பத்து வருஷத்துக்கு முன்னாடியே நான் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் வாங்கிட்டு இருந்தேன். நான் அப்போ முப்பது படம் நடிச்சுருந்தேன். ஆனா என்கிட்ட வந்து பத்து பதினைஞ்சுன்னு பேசினாங்க, அதனால நான் வேண்டாம்ன்னு இருந்தேன். இப்போ நான் நடிக்கலாம்ன்னு வந்தா, நானே 15 ஆயிரம்தான் கேக்குறேன், அவங்க 8 ஆயிரம்தான் தருவேன்னு சொல்றாங்க. மேடம் அவங்களே இவ்வளவுதான் வாங்குறாங்கன்னு யாரையாவது சொல்றாங்க. அவங்க வங்கட்டும், என் சேலரி இவ்வளவு, நான் நடிச்சா கண்டிப்பா டிஆர்பி ஏறும்.



ரெண்டு விஜய் டிவி சீரியல் வந்தது, ரெண்டுமே 8 ஆயிரம் தான் சொன்னாங்க, ஒரு 12 ஆயிரத்திற்காவது ஏறி வந்தால் சரி, ஆனால் எட்டாயிரத்திலேயே தான் நிற்கிறார்கள். அதனால் நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். சம்பளம் குறைச்சாதாலேயே ஒரு 10 வருஷமா நடிக்கததனால இப்போ இந்த நிலையில இருக்கேன். சில கதைகள் நல்லா இருந்தா, நான் ஃப்ரீயாவே பண்ணி தர்றேன். எனக்கு அதுல பிரச்சனை இல்லை, 8 ஆயிரம் கூட வேண்டாம், நான் நடிச்சா ஹிட் ஆகாதுன்னே நெனச்சு எடுங்க. எனக்கு எதுவும் தர வேண்டாம். ஆனால் டிஆர்பி வந்தால் 15 ஆயிரம் தரணும்ன்னும் இல்லையா… ஆனா இது எதையும் நானே போயி அவங்க கிட்ட சொல்ல முடியாது, நான் அப்படி இப்படி, யார் தெரியுமா என்றெல்லாம் பேச முடியாது. அதுதான் என்னை முடக்கிவிட்டது. நாம நெனச்சுட்டு இருப்போம் நம்ம வீட்ல எல்லாம் இப்படி இருக்க எவ்வளவு கொடுத்து வச்சிருக்கணும்ன்னு. ஆனா காசு இல்லனா வீட்ல கூட மதிக்க மாட்டாங்க. தாயும் சேயும் ஒண்ணுன்னாலும் வாயும் வயிறும் வேறன்னு சொல்றது உண்மைதானா. ஆனா பெத்த அம்மாவே அப்படி நெனைக்குறப்போ, ரொம்ப வலிக்கும்” என்று மனம் திறந்துள்ளார்