புரட்டாசி மாதம் துவங்கியதையடுத்து, நடிகை காஜல் அகர்வால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். கெளதம் கிட்சுலு எனும் தொழிலதிபரை 2020- ல் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கருவுற்ற காஜல், ஆண் குழந்தையை ஏப்ரல் மாதம் பெற்றெடுத்தார்.
அஜித், விஜய் என முன்ணனி ஹீரோக்களுடன் மட்டுமல்லாமல், டோலிவுட் பாலிவுட் என இந்திய சினிமாவை கலக்கினார் காஜல் அகர்வால். இனி, காஜல் சினிமா பக்கமே வர வாய்ப்பில்லை என்று நினைத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு, இந்தியன் 2 படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்து ஷாக் கொடுத்தார் இவர்.
இந்தப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் துவங்கிய நிலையில், படப்பிடிப்புகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது, அவர் குழந்தையின் படங்களையும், கணவர் மற்றும் குடும்பத்தினரின் புகைப்படங்களையும் போஸ்ட் செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார் இவர். அதுபோக, இன்ஸ்டா பக்கத்தில் பல ப்ரொமோஷன்களிலும், காஃபித்தூள் விளம்பரங்களிலும் காணப்படுக்கிறார் காந்த கண்ணழகி காஜல்.
இந்நிலையில், கணவருடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் காஜல்.இவர் சுவாமி தரிசனத்தை முடித்து வெளியே வர, இவரை தொடர்ந்து ஒருவர் வந்தார். அவரை தொடர்ந்து கூட்டமாக பல ரசிகர்கள் தொடர்ந்து வந்து சிரித்தபடியே நின்று கொண்டிருந்தனர். இதை சற்றும் எதிர்பாராத காஜல், தன் கணவருடன் அங்கிருந்து புறப்பட தொடங்கினார். ஆனால் அவரை பின் தொடர்ந்து வந்த ரசிகர்கள், அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றனர். வேறு வழியின்றி, அவருடம் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.