நடிகர் சூர்யா ரொம்ப உஷாரான ஆள் என்று சர்டிஃபிகேட் கொடுத்துள்ளார் நடிகையும் அவரது மனைவியுமான ஜோதிகா. நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அவர்களின் காதலுக்கு நடிகர் சிவகுமார் ஒப்புக்கொண்டார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் பூத்த காதல் கணிந்து திருமணமானது.


சூர்யா ஜோதிகா தம்பதி உதாரணத் தம்பதியாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர். திருமணத்திற்குப் பின்னர் நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா 36 வயதினிலே படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த How Old are You? என்ற படத்தின் ரீமேக். இந்தப் படம் ஜோதிகாவுக்கு கம்பேக்காக அமைந்தது.


இந்நிலையில் மகளிர் மட்டும், ராட்சஸி, பொன்மகள் வந்தாள் என அடுத்தடுத்து வித்தியாசமான கதைக் களங்களில் நடித்தார். ஆனால் இப்படங்கள் அவ்வளவு வரவேற்பை பெறவில்லை. சமுத்திரகணி, சசிகுமாருடன் உடன்பிறப்பு என்ற படத்திலும் நடித்தார்.
சூர்யா ஜோதிகா இணைந்து 2டி என்டெர்டெய்ன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். கடைசியாக இந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ஜெய் பீம் திரைப்படம் சர்வதேச அளவில் புகழ் பெற்றது. 


இந்நிலையில் அண்மையில் ஜோதிகா ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். 




சூர்யா ரொம்ப உஷார்..


சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா, ஜோதிகா தம்பதியாக நடித்திருப்பார்கள். அதில் சூர்யாவுக்கு திருமணத்துக்கு முன்பே ஒரு காதல் இருந்திருக்கும். அந்தக் காதல் போல் உண்மையிலே சூர்யாவுக்கு ஏதும் காதல் இருந்துள்ளதா? அதை நீங்கள் படத்தில் கண்டுபிடிப்பது போல் கண்டுபிடித்துள்ளீர்களா? அல்லது சூர்யாவே உங்களிடம் சொல்லி இருக்கிறாரா? போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு ஜோதிகா ஒரே வார்த்தையில் சூர்யா ரொம்ப உஷார். அது மாதிரி எதுவும் என் கிட்ட சொன்னதும் இல்லை. நானும் எதுவும் கண்டுபிடித்தது இல்லை என்று கூறினார். தங்கள் காதலுக்கு சூர்யா வீட்டார் ஒப்புக் கொண்டதுமே அதுவரை கமிட் ஆகியிருந்த படங்களை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துவிட்டு திரைக்கு முழுக்குப் போட்டு திருமணத்தில் இணைந்தேன் என்று மகிழ்ச்சி பொங்க ஜோதிகா கூறியுள்ளார்.


புல்லட் தான் பெஸ்ட்:


மகளிர் மட்டும் படத்தில் ஜோதிகா புல்லட் ஓட்டியிருப்பார். அதை சூர்யா தான் அவருக்குக் கற்றுக் கொடுத்தார். அந்த அனுபவம் பற்றி கூறிய ஜோதிகா, நான் இரண்டே நாளில் புல்லட் பேலன்ஸ் எல்லாம் கற்றுக் கொண்டேன். அதன் பின்னர் ஷீபா என்பவர் தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார். அவர் தான் சூர்யாவுக்கு ஹார்லி டேவிட்சன் பைக்கை வீட்டிற்கு கொண்டு வந்து டெலிவரி கொடுத்தார். சூர்யா பிஸியாக இருந்ததால் நான் அந்தப் பெண்ணின் நம்பரை தேடிப் பிடித்து அவரிடம் கற்றுக் கொண்டேன். எனக்கு ஹார்லி டேவிட்சன்னும் ஓட்டக் கொடுத்தார். ஆனால் இந்திய சாலைகளில் இந்திய புல்லட் தான் பெஸ்ட். எனக்கு என்னவோ இப்பவும் புல்லட் தான் ரொம்ப பிடிக்கும் என்றார்.