மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் ஜோதிகா நடித்துள்ள 'காதல் தி கோர்' திரைப்படம் சென்ற மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. தன்பாலின ஈர்ப்பாளராக நடித்துள்ள நடிகர் மம்மூட்டியின் மனைவியாக ஜோதிகா உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்தது பாராட்டுகளைக் குவித்து வருகிறது.


இந்நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு தான் நடித்துள்ளது பற்றியும், தன் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் நடிகை ஜோதிகா மனம் திறந்து பேசியுள்ளார். தனியார் ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:


நடிக்க வந்து 25 வருஷம்


"என் சினிமா கரியர் தொடங்கி 25 ஆண்டுகள் கடந்துடுச்சு. இரண்டாம் ஆண்டு சைக்காலஜி படிச்சிட்டு இருந்தேன். எக்ஸாம்ஸ் முடிச்சிட்டு அப்பவே இந்தி படம் தொடங்கிட்டேன்.


இந்தி படத்தின் ஷூட்டிங்கின்போது வசந்த் சார் என் இரண்டாவது படத்துக்கான கதை சொன்னாங்க. நான் ஓகே சொன்னேன்.  என் முதல் படம் வாலியாக தான் இருந்துருக்கணும். சிம்ரன் ரோலுக்கு என்னை கேட்டாங்க.. ஆனால் நடுவில் இந்தி படம் வந்ததால் நான் அந்தப் படம் செய்ய வேண்டி இருந்தது.


அதன் பின் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் வந்து கேட்டபோது, நான் படத்தில் இருந்து விலகி தவறு செய்திருந்ததால், நான் கெஸ்ட் ரோலுக்கு ஓகே சொன்னேன்.  அப்பா தயாரிப்பாளர் என்பதால் எனக்கு பட வாய்ப்புகள் வந்தன. அம்மா செய்ய சொன்னதால் அப்படியே நடிக்க ஆரம்பித்தேன்.


மாமனார் சொன்னது இதுதான்!


எப்பயும் சினிமாவுக்கு இரண்டாவது இடம் கொடுத்துட்டு என் வாழ்க்கைக்கு முதல் இடம் கொடுத்து இருக்கேன். மூணு, நாலு வருஷம் இடைவெளி.. அப்றம் படம்னு நிறைய நல்ல படங்கள் பண்ணி இருக்கேன். எனக்கு கொஞ்சம் லக் இருக்கு” எனப் பேசியுள்ளார்.


“கல்யாணத்துக்குப் பிறகு உங்க மாமனார் சிவக்குமார் நடிக்கக்கூடாதுனு சொன்னதாக தகவல் ஒன்னு பல காலமா பரவிட்டு இருக்கே?” என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜோதிகா, “இத நான் க்ளியர் பண்ணியே ஆகணும். இது உண்மைக்கு அப்படியே நேர் எதிர். நிஜமா வீட்ல அவர் தான் எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணி இருக்காரு. ஷூட்டிங் நேரத்தில் வேலைக்கு போகும்போது வீட்ட மறந்துடுங்க, குழந்தைய மறந்துடு, பொறுப்ப மறந்துடுனு பேசுவாரு. நிஜமாவே அவர் தான் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட்.


தன் நண்பர்களுடன் படம் பார்ப்பார்!


இதுமாதிரி செய்திலாம் எங்க இருந்து வருதுனு தெரியல. இப்பகூட மலையாளம் படமான காதல் த கோர் படத்துக்கு அப்பாக்காக ஒரு ஷோ வச்சேன். அவர் ரொம்ப பெருமைப்பட்டாரு. தன் நண்பர்கள கூட்டிட்டு வந்து என் மலையாளப் படத்தை சப்டைட்டிலோட பாத்தாரு. அவர் என் வேலைய நினைச்சு ரொம்ப பெருமைப்படறாரு. ஒவ்வொருமுறையும் என் படம் பார்த்து முடிச்சிட்டு இயக்குநர், படக்குழுவலாம் கூப்பிட்டு பேசுவாரு. இது முழுக்க முழுக்க தவறான புரிதல்” எனக் கூறியுள்ளார்.