தமிழ் சினிமாவில் கொண்டாட்டமான இசைக்கும், பிறந்த குழந்தைகளையும் ஆட வைக்கும் பாடல்களுக்கு சொந்தக்காரராகவும் வலம் வருபவர் இளம் இசையமைப்பாளர் அனிருத்.
ராக்ஸ்டார் அனிருத்
2012ஆம் ஆண்டு ஐஸ்வர்யா இயக்கிய ’3’ படத்தில் அறிமுகமாகி, இன்று ரஜினி, கமல் ஆகிய உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு அனிருத் வளர்ந்துள்ளார். முன்னதாக இவர் இசையமைத்து வெளியான விக்ரம், டான், பீஸ்ட் படங்களின் பாடல்கள் ரசிகர்களை கொண்டாட்டத்தில் பட்டி தொட்டியெல்லாம் கலக்கி வருகின்றன.
அதிலும் குறிப்பாக பிரபல பாடகி ஜொனிட்டா காந்தியுடன் அனிருத் பாடும் பாடல்கள் அனைத்தும் தொடர்ந்து ’வேற லெவல்’ ஹிட் அடித்து வருகின்றன.
குறிப்பாக படங்களில் அந்தப் பாடல்களுக்கு வரும் விஷுவல்கள் தாண்டி, ஜொனிட்டா காந்தி - அனிருத் இணைந்து பாடி வெளியிடும் லிரிக்கல் வீடியோக்கள் தான் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெறுகின்றன. ஒருபுறம் அனிருத்தின் திருமணம் குறித்து பல்வேறும் தகவல்களும், மறுபுறம் இவர்கள் இருவரும் நிஜ வாழ்விலும் காதலிக்கிறார்கள் என்பன போன்ற தகவல்களும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
அனிருத் தான் சிங்கிள்
இந்நிலையில், முன்னதா திருமணம் குறித்து ஜொனிடா காந்தியிடம் நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டது. அதில், ”ரன்வீர், சூர்யா, அனிருத் மூவரில் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள்?” என்ற கேள்விக்கு, ”அனிருத் தான் சிங்கிள், அவருக்கு மட்டும் தான் இதுவரை திருமணம் நடக்கவில்லை, அதனால் அனிருத்தை நான் திருமணம் செய்து கொள்வேன்” என ஜொனிடா பளிச் பதில் அளித்துள்ளார்.
ஏற்கெனவே இந்த ஜோடியை ரசிகர்கள் ரசித்து வரும் நிலையில், ஜொனிட்டாவின் இந்த பதில் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2013ஆம் ஆண்டு சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பாடகியாக அறிமுகமாக ஜொனிட்டா காந்தி விரைவில் ’வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்’ என்ற படத்தில் கதாநாயகியாகவும் அறிமுகமாக உள்ளார்.