நடிகை இனியா தமிழ் சினிமாவில் சற்குணம் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்த வாகை சூட வா மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் இனியாவின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. கிராமத்து பெண்ணாக அவர் ஏற்று நடித்த வேடம் இன்றளவும் யாராலும் மறக்க முடியாத ஒன்று. இனியா நடித்த முதல் படமே தேசிய விருது கிடைத்தது. மேலும் இனியா தமிழில் நான் சிகப்பு மனிதன், புலிவால் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார், தொடர்ச்சியாக சில மலையாள திரைப்படங்களிலும் நடித்தார்.


மலையாளத்திற்கு சென்ற இனியா நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் விலங்கு வெப் சீரிஸ் மற்றும் சமுத்திரகனி நடித்த ரைட்டர் படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தார். இந்த நிலையில், இனியா சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்தார்.


அதில் நடிகை பார்வதிக்கு பதிலாக மரியான் படத்தில் நான்தான் நடித்திருக்க வேண்டியது என்று தெரிவித்து இருந்தது தற்போது வைரலாகி வருகிறது. 


இதுகுறித்து அந்த வீடியோ பதிவில், ”நான் நடித்திருந்த கதாப்பாத்திரம் ஒரு சில நேரத்தில் என்னை அறியாமல் என் வாழ்க்கையோட கலந்துவிடும். அட என்னப்பா இது நான் தான் படத்துல இந்த கதாபாத்திரம் நடிச்சு முடிச்சுடேனே இது எதுக்கு நம்ம பின்னாடி வருதுன்னு நிறைய நாள் குழம்பி இருக்கேன். உதாரணமா, நான் வாகை சூடவா படத்துல நடிக்குறத்துக்காக நிறைய நாள் கண்ணாடி முன்னாடி உட்கார்ந்து ப்ராக்டிஸ் பண்ணேன். நிறைய ஹோம் வொர்க் செஞ்சேன். கிட்டத்தட்ட அந்த படம் 60 நாள் சூட்டிங் போச்சு. படம் முடிஞ்சு அதே ஸ்லாங்ல பல நாள் பேசிட்டு இருந்தேன். 


நானா எந்த கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து நடிக்க மாட்டேன். வித்தியாசமான, முக்கியமான கதாபாத்திரங்கள் அதுவா என்னைய தேடி வரும். அதேமாதிரி எந்த இயக்குநர்கிட்ட போய் எனக்கு இந்த கேரக்டர் கொடுங்கன்னு கேட்கல. என் அம்மாவும் சொன்னாங்க உன்ன தேடி நல்ல கேரக்டர் வருது. அதுல நடிச்சு நல்ல பெயர் எடுக்கணும்ன்னு சொன்னாங்க. 


நல்ல கதை உள்ள கதாபாத்திரம் என்னைய தேடி வந்தாலும் நிறைய படத்த மிஸ் பண்ணிருக்கேன். அது ஒரு விதத்துல நல்லதாவும் அமைஞ்சுருக்கு. அவங்களுக்கும் அது நல்லதுதான். அந்த மாதிரி முக்கியமான படம்னா பரத் பாலா சார் இயக்கிய மரியான் படம். அதுல வர பார்வதி நடிச்ச கேரக்டர் நான் பண்ண வேண்டியதுதான். பேசி அந்த படம் நான் நடிக்க வேண்டியதா கான்பார்ம் ஆகிருச்சு. கடைசி நேரத்துல அமெரிக்கா போனதுனால படம் மிஸ் ஆகிருச்சு” என்று பேசி இருந்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண