தன் ஒல்லி பெல்லியால் இந்திய சினிமா ரசிகர்களைக் கட்டிப்போட்ட நடிகை இலியானா தன் கர்ப்ப கால புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
இலியானா:
கோலிவுட்டில் கடந்த 2006ஆம் ஆண்டில் ரவி கிருஷ்ணா ஜோடியாக கேடி படத்தில் அறிமுகமானவர் நடிகை இலியானா. தெலுங்கு போக்கிரியின் மூலம் அதே ஆண்டு பெரும் ஹிட் அடித்த இலியானா, தொடர்ந்து டோலிவுட்டின் டாப் நடிகைகளுள் ஒருவராக உருவெடுத்தார்.
அதன் பின் கோலிவுட், பாலிவுட் எனப் பயணித்த இலியானா, அமிர் கான், மாதவன், தமிழில் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தமிழ் போக்கிரி படத்தில் இவரை விஜய் நடிக்கவைக்கக் கோரிய நிலையில் அது முடியாமல் போனது. இந்நிலையில் விஜய்யுடன் இவர் நடித்த நண்பன் படத்தில், இவருக்காகவே ‘இருக்கானா இடுப்பு இருக்கானா இல்லையானா இலியானா..’ என்ற பாடல் வரிகள் அமைக்கப்பட்டு அப்பாடல் பெரும் ஹிட் அடித்தது.
கர்ப்பகால புகைப்படம்:
தொடர்ந்து ரன்பீர் கபூர், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் எனப் பலருடன் ஜோடி சேர்ந்த இலியானா, தான் கர்ப்பமாக இருப்பதாக முன்னதாக தன் இணைய பக்கத்தில் அறிவித்திருந்தார்.
“கூடிய விரைவில்.. உன்னை பார்க்க நான் காத்திருக்கிறேன் என் குட்டி டார்லிங்” என்ற கேப்ஷனுடன், குழந்தை உடை மற்றும் மாமா (அம்மா) என்ற செயினின் புகைப்படத்தையும் இலியானா ஷேர் செய்திருந்தார்.
இந்நிலையில் இன்னும் திருமணமாகாத இலியானா கருவுற்றிருப்பது குறித்த கேள்விகள் எழுந்தன. இச்சூழலில், கத்ரீனா கைஃபின் அண்ணனான செபாஸ்டின் லாரன்ட் மிச்சலை இலியானா டேட் செய்து வரும் தகவல்கள் இணையத்தில் பரவின.
ரசிகர்கள் வாழ்த்து:
இதனை அடுத்து, இலியானாவின் அம்மா சமீரா இலியானா டி க்ரூஸூம் தன் பேரக் குழந்தையை வரவேற்க ஆவலுடன் காத்திருப்பதாகப் பகிர விக்கி கெளஷல் - கத்ரீனாவின் ரசிகர்களின் இன்ஸ்டா பக்கத்தில் இலியானாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இலியானா தற்போது தன் கர்ப்ப கால புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை உதைக்கும் தருணத்தை இலியானா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள நிலையில், அவருக்கு நடிகைகள் தமன்னா, அத்தியா ஷெட்டி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தும், இதயங்களை வழங்கியும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இலியானாவின் பாய் ஃப்ரெண்ட் குறித்து கேள்வி எழுப்பி ஆபாசமாக பலர் கமெண்ட் தெரிவித்து வரும் நிலையில், இவர்களுக்கு இலியானாவின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து கமெண்ட் செய்தும் வருகின்றனர்.