Kamalhaasan: கமல்ஹாசனை கடைசியாகப் பார்க்க விரும்பிய ஸ்ரீவித்யா: இயக்குநர் சந்தானபாரதி சொன்ன தகவல்


சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன் அளித்த பேட்டி இணையத்தில் வைரலானது. அதில் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் புகைப்படம் காட்டப்பட்டது. அதைப் பார்த்ததும் “ஸ்ரீவித்யா என்னுடைய காதலி, இதை சொல்ல நான் பயப்படவில்லை” என வெளிப்படையாக பதிலளித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. இந்நிலையில் கமல்ஹாசன் - ஸ்ரீவித்யா காதல் குறித்து இயக்குநர் சந்தானபாரதி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க


Aaradhya Bachchan: அம்மா ஐஸ்வர்யா ராயின் ஜெராக்ஸாக வளர்ந்த மகள்: புது லுக்கில் அசத்தும் ஆராத்யா பச்சன்!


12 வயதாகும் ஆராத்யா இது வரையில் குட்டிப் பாப்பாவாக முகத்தின் பெரும்பாலான பகுதியை முடியை வைத்து மறைத்துக் கொள்ளும் படியான ஹேர்ஸ்டைலில் தான் எப்போதுமே தோன்றுவார். ஆனால் முதல் முறையாக மிகவும் வித்தியாசமான ஒரு ஹேர்ஸ்டைலில் அம்பானி வீட்டு விழாவில் கலந்து கொண்டார். ஆராத்யாவை பார்த்த பலரும் வியப்பில் ஆழ்ந்து இருந்தனர். இது உண்மையிலேயே ஆராத்யா தானா? என அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்து இருந்தார். பார்க்க அச்சு அசல் அவரின் அம்மா ஐஸ்வர்யா ராய் போலவே தோற்றமளிக்கிறார் என்பது தான் அனைவரின் விமர்சனமாக இருந்தது. அம்மா அப்பா மகள் என மூவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தனர். மேலும் படிக்க


Tamil Nadu Government Film Awards: இன்று தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் விழா.. யார் யாருக்கு விருதுகள்..? முழு பட்டியல் இதோ!


தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் விழா இன்று நடைபெறுகிறது. இன்று சென்னையில் நடைபெறும் 2015ம் ஆண்டுக்கான தேர்வு செய்யப்பட்ட சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விருது விழாவில் திரைப்பட விருதுகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்குகிறார். இந்த விழாவில் மொத்தம் 39 விருதாளர்களுக்கு காசோலை, தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. மேலும் படிக்க


Gouri Kishan: பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டுகிறேனா? - டென்ஷனான நடிகை கௌரி கிஷன்


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கௌரி கிஷன் சமீபகாலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட, அதற்கு இணையவாசிகள் பலவிதமான கமெண்டுகளை தெரிவித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கௌரி கிஷன் கருத்து தெரிவித்துள்ளார்.  மேலும் படிக்க


Santhosh Narayanan: ஏ.ஆர்.ரஹ்மானும் ஏமாந்துள்ளார்: என்ஜாய் எஞ்சாமி பாடல் விவகாரத்தில் சந்தோஷ் நாராயணன் விளக்கம்


எஞ்சாயி எஞ்சாமி பாடல் குறித்த புதியதொரு சர்ச்சை தொடங்கியுள்ளது. அதன்படி நேற்று தன் சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்த சந்தோஷ் நாராயணன், இந்தப் பாடல் மூலம் எங்களுக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். இதில் என் யூட்யூப் வருமானமும் அந்த லேபிளுக்கே செல்கிறது. இந்த மோசமான அனுபவத்தால்  நான் சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றைத் தொடங்க போகிறேன். தனி இசைக் கலைஞர்களுக்கென வெளிப்படைத் தன்மையுடன் கூடிய தளங்கள் தேவை” எனப் பேசி இருந்தார்.மேலும் படிக்க