கடந்த 30 ஆண்டு காலமாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை மிகவும் பிரபலமான ஒரு முகமாக நடித்து வருபவர் நடிகை தரணி. பூவே உனக்காக, மிடில் கிளாஸ் மாதவன், மாசிலாமணி, கொம்பன் என ஏராளமான திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மேலும் சின்னத்திரத்தில் தாலாட்டு, வாணி ராணி, பொன்மகள் வந்தாள், நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட ஏராளமான சீரியல்களிலும் நடித்துள்ளார். 


'எரியுதுடி மாலா...' காமெடி :


நடிகை தரணி 'மிடில் கிளாஸ் மாதவன்' படத்தில் வைகை புயல் வடிவேலுவுடன் மாலா என்ற கதாபாத்திரத்தில் நடித்த 'எரியுதுடி மாலா...' காமெடி இன்றளவும் நினைத்தாலே சிறப்பு வரும் அளவிற்கு சூப்பர் ஹிட் காமெடி. இப்படி சீரியஸ் ரோல்களில்  மட்டுமின்றி காமெடியிலும் கலக்கியவர் நடிகை தரணி. அவர் நேர்காணல் ஒன்றில் தனக்கு சினிமா துறையில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து நடந்த பகீர் அனுபவத்தை பகிர்ந்து இருந்தார். 


 



அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்ன கேமரா மேன்:


ஆரம்ப காலகட்டத்தில் முதல் இரண்டு மூன்று படங்கள் வரையில் எனக்கு எந்த பிரச்சனையும், தொந்தரவும்  வந்ததில்லை. ஒரு படத்தில் நான் ஹீரோயினாக நடித்து இருந்தேன். அப்போது படத்தின் இயக்குநர் மற்றும் கேமரா மேன் இரண்டு பேரும் அப்ரோச் செய்தார்கள். இயக்குநர் கூட பெருசா தொல்லை செய்யல, கேமரா மேன் தான் அதிகமாக தொல்லை கொடுத்தார். என்ன மேடம் தங்கச்சி ரோல் பண்ண உங்களுக்கு, ஹீரோயின் வாய்ப்பு கொடுத்து இருக்கோம் அப்படி இப்படினு பேசுனாரு.


நான் அவரிடம் சார் என்னை நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. நீங்கள் என்னை பற்றி விசாரித்து பாருங்கள். நான் இண்டஸ்ட்ரி உள்ள அப்படி செய்து தான் வந்தேனா என கேட்டு பாருங்க. அப்படி என்னை பற்றி யாராவது தப்பா சொன்னாங்கன்னா நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன் அப்படின்னு சொல்லிட்டேன். இந்த மாதிரி ஒரு பதிலை நான் சொல்வேன் என அவர் எதிர்பார்க்கவேயில்லை. அவர் இதை எப்படி எடுத்துகிட்டாருனு தெரியல. ஒரு நாள் சம்மர் டைம்ல ஷூட்டிங் நடக்கும் போது HMV அப்படின்னு ஒரு லைட் இருக்கும். அது ரொம்பவே சூடான ஒரு லைட். அதை அப்படியே என் பக்கமா திருப்பினார். முகமே அப்படி எரிந்து போன மாதிரி ஆகிவிட்டது. அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி மறுத்ததற்கு அவருக்கு நேர்ந்த அனுபவம் குறித்து நடிகை தரணி பகிர்ந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.