இந்திய சினிமாவின் குயினாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன். என்றும் மாற இளமையோடும் வசீகரத்தோடு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த தீபிகா படுகோன் அமெரிக்காவில் பிறந்தவர். கடந்த 1986 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள டென்மார்க்கின் தலைநகரமான கோப்பென்ஹாகெனில் பிறந்தார். இவர் தாயார் பெயர் உஜ்ஜலா மற்றும் தந்தை பிரகாஷ் படுகோன்.
பிரகாஷ் படுகோன் மிகச்சிறந்த பூப்பந்தாட்ட வீரராகவும் இருந்திருக்கிறார். இந்தநிலையில், கடந்த, 1980ல், பேட்மிண்டனில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தன் தந்தை பிரகாஷ் படுகோனின் வாழ்க்கை கதையை பாலிவுட் நடிகை, தீபிகா படுகோனே படமாக எடுக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, 1983 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கோப்பையை வென்றது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியில் இந்திய அணியை கபில் தேவ் தலைமை தாங்கினார். இதனை மையமாக கொண்டு 83 படம் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் ஜீவா, ரன்வீர் சிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ரன்வீர் சிங், தீபிகா படுகோன் இணைந்து தயாரித்தனர்.
பிரகாஷ் படுகோன் வாழ்க்கை வரலாறு படத்திலும் தனது தந்தை கதாபாத்திரத்தில் தனது கணவர் ரன்வீர் சிங்கை நடிக்க வைக்க தீபிகா படுகோன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து பட அறிவிப்பு வெளியாகும் என்றும், இயக்குநர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தீபிகா என்னதான் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக களமிறங்கியிருந்தாலும் அவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர். தீபிகா 11 மாத குழந்தையாக இருக்கும்பொழுது , குடும்பத்துடன் அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு குடியேறியுள்ளனர். பெங்களூரில் உள்ள சோபியா உயர்நிலை பள்ளியிலும் , மவுண்ட் கார்மெல் கல்லூரியில் தனது கல்வியை முடித்தார். பின்னர் மாடலிங், ஃபேஷன் ஷோ, விளம்பர படங்கள் என திரைத்துறையில் கால்பதித்த தீபிகா தற்போது முன்னணி நாயகியாக வலம்வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்