பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்துவரும் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோன் தம்பதிகள் மும்பை கடற்கரையை ஒட்டி புதிதாக உருவாகிவரும் அடுக்குமாடி குடியிருப்பில் விலையுயர்ந்த 4 வீடுகளை 119 கோடி ரூபாயில் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்துவரும் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோன் இருவரும் 6 வருடங்களாகத் காதலித்து பின்னர் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிக்கு மகாராஷ்டிராவின் அலிபாக் பகுதியில் பங்களா உள்ளது. இந்நிலையில் மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குத்தகைக்கு அவர்கள் தங்கியிருந்தனர். இருவருமே சினிமாவில் படு பிசியாக நடித்துவரும் நிலையில், சமீபகாலகமாக இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வருவதாகவும் இதனால் விவாகரத்திற்கு முயற்சித்து வருவதாகவும்  சில வதந்திகள் வெளியாகின.


இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இப்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இப்போது பாந்த்ரா பகுதியில் கடற்கரைக்கு அருகிலேயே பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பில் 16வது தளம் முதல் 19வது தளம் வரை 4 தளங்களில் உள்ள 4 வீடுகளை தீபிகா படுகோன், ரன்வீர் சிங் சேர்ந்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் விலை 119 கோடி ரூபாய்.


இந்த வீட்டின் உள்அலங்கார வேலைகளை தீபிகா படுகோன் முன்நின்று கவனித்து வருகிறாராம். இதற்காக படப்பிடிப்புக்கு அவர் லீவு எடுத்து இருக்கிறாராம். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புதிய வீடு, ஷாருக்கானின் வீட்டிற்கு அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பாலிவுட்டில் ஷாரூக்கான் -தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் 1000 கோடி வசூலித்தது. இதைத் தொடர்ந்து தீபிகா படுகோன், நடிகர் பிரபாஸுடன் இணைந்து ‘ப்ராஜெக்ட் கே’ திரைப்படத்திலும் ஹிரித்திருக்குடன் இணைந்து ‘ஃபைட்டர்’ படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க 


CM Stalin On Senthil Balaji Arrest: திமுகவினரை சீண்டிப் பார்க்காதீர்கள்.. எல்லா அரசியலும் தெரியும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..


Senthil Balaji Arrest: துன்புறுத்தப்பட்டாரா செந்தில் பாலாஜி ? மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் சொன்ன பகீர் குற்றச்சாட்டு..