டேராடூனில் பிறந்த நடிகை அங்கீதா மஹாராணா. சிறுவயதிலேயே மாடலிங் துறைக்கு வந்த இவர் தெலுங்கில் வெளியான 4 லெட்டர்ஸ் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருக்கு தெலுங்கில் பிரபல இயக்குநராக வலம் வரும் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான ‘த்ரில்லர்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  


தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்த அங்கீதா தனது பெயரை அப்சரா ராணியாக மாற்றிக் கொண்டார்.  பல படங்களில் நடித்த அப்சரா தற்போது தனக்கு திரைத்துறையில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார்.


 


 






அந்த சம்பவம் குறித்து பேட்டி ஒன்றில், அப்சரா கூறும் போது, “கன்னட படம் ஒன்றில் நான் கமிட் ஆகியிருந்தேன். என்னை கதை விவாதத்தில் கலந்துக்க சொல்லி ஹோட்டல் அறை ஒன்றுக்கு வரசொன்னார்கள். தனியாக வரச்சொன்னார்கள். ஆனால் நான் என் அப்பாவுடன் அங்கு சென்றேன். அங்கே போனபோது அவர்கள் என்னை தவறான காரணத்திற்காக வரச் சொன்னது தெரிய வந்தது. அவர்கள் தேவைகளை நிறைவேற்றினால் வாய்ப்பு தருகிறோம் என்றார்கள். 


 


 






மேலும் அவர்கள் ஆசையை நான் நிறைவேற்றாத பட்சத்தில் எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட மாட்டாது என்று கூறினார்கள். இதனையடுத்து நிலைமை புரிந்து நாங்கள் அங்கிருந்து நகர்ந்துவிட்டோம். தெலுங்கில் இது போன்ற தொல்லைகளை சந்தித்ததில்லை. திறமை உள்ளவர்களுக்கு தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு படம் வெற்றி பெற்று விட்டால், தெலுங்கு ரசிகர்கள் மதிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.