தனக்கு வரும் கணவர் எப்படியிருக்க வேண்டும் என்பது பற்றி நடிகை அபர்ணா பாலமுரளி பேசியிருக்கிறார்.
இது குறித்து ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு பிரேத்யமாக அளித்த பேட்டியில், “ எனக்கு வரும் கணவர் நிச்சயம் மற்றவரை மதிக்க கூடியவராக இருக்க வேண்டும். தொழிலாக இருந்தாலும் சரி, வாழ்கையாக இருந்தாலும் சரி அதில் மிகவும் ஆர்வம் உடையவராக இருக்க வேண்டும். அவர் மீதே அவருக்கு ஒரு நம்பிக்கை இருக்க வேண்டும். மேலும் ஒரு உறவில் நாம் இருக்கும் போது அந்த உறவில் நடக்கும் சில விஷயங்கள் நமக்கு பிடிக்க வில்லை என்றால் அதனை அவரிடம் சொல்வதற்கான சுதந்திரம் நமக்கு இருக்க வேண்டும்.” என்றார்.
தமிழில் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் மூலமாக அறிமுகமான நடிகை அபர்ணா பாலமுரளி முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். அதே போல அந்தப்படத்தில் நடித்த நடிகர் சூர்யா, படத்தின் இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ்குமார், படத்தின் இயக்குநர் சுதாகொங்கரா, சிறந்த படத்திற்காக விருது என மொத்தம் 5 பிரிவுகளில் இந்தப்படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்தப்படத்திற்கு தமிழில் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி நடித்த வீட்ல விசேஷம் படத்தில் நடித்திருந்தார் அபர்ணா இந்தப்படமும் ஹிட் அடித்த நிலையில், தற்போது ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்தப்படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடித்துள்ள நிலையில், துணை கதாபாத்திரங்களாக நடிகைகள் ரித்துவர்மா மற்றும் ஷிவாத்மிகா நடித்துள்ளனர். இந்தப்படத்தை இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கி இருக்கிறார். நித்தம் ஒரு வானம் படத்தை ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 உடன் இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளது. சென்னை, சண்டிகர், மணலி, கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் கொல்கத்தா என உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்த நிலையில், படம் வரும் நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் உள்ளது.