நிவின்பால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் பிரேமம். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கிலும் இந்த படத்திற்கு மாபெரும் வெற்றி கிட்டியது. இந்த படத்தில் அறிமுக நடிகையாக அறிமுகமானவர்கள் அனுபமா பரமேஸ்வரன், சாய்பல்லவி. இருவருமே இன்று முன்னணி நடிகையாக வலம் வருகின்றனர்.


அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி படம் மூலமாக தனுஷ் ஜோடியாக அறிமுகமானார். தெலுங்கிலும் தற்போது நடித்து வருகிறார். ஆரம்பத்தில் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த அனுபமா தற்போது கவர்ச்சி ரூட்டிற்கு மாறியுள்ளார். இதனால், தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.




ஆந்திராவில் மகர சங்கராந்தியை முன்னிட்டு ரவுடிபாய்ஸ் என்ற படம் வெளியானது. இந்த படத்தில் ஆஷிஷ் ரெட்டி நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இந்த படத்தில், ரொமான்ஸ் காட்சி ஒன்றில் கதாநாயகன் ஆஷிஷ் ரெட்டியும் – அனுபமா பரமேஸ்வரனும் லிப்லாக் செய்வது போன்று காட்சி ஒன்று உள்ளது.


இந்த காட்சியில் நடிப்பதற்கு இயக்குனர் முதலில் கூறியதற்கு அனுபமா மறுப்பு தெரிவித்துள்ளார். பின்னர், இந்த காட்சியில் நடிப்பதற்கு மட்டும் ரூபாய் 50 லட்சம் பிரத்யேக சம்பளமாக வழங்குவதாக படத்தயாரிப்புக்குழு கூறியுள்ளது. இதையடுத்து, அனுபமா பரமேஸ்வரன் இந்த காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டார். குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலே நடித்து வந்த அனுபமா லிப்லாக் காட்சியில் நடித்திருப்பது டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




இந்த ரவுடி பாய்ஸ் படத்தை ஹர்ஷா கோனுகாண்டி இயக்கியுள்ளார். தில் ராஜூ மற்றும் ஷ்ரிஷ் இணைந்து தயாரித்துள்ளனர். தில் ராஜூவின் மருமகன் ஆஷிஷ்தான் படத்தின் நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  


2015ம் ஆண்டு மலையாளம் படத்தில் அறிமுகமான அனுபமா அடுத்தாண்டே அ ஆ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். பிரேமம் தெலுங்கு படத்திலும் நாயகியாக நடித்தார். இதையடுத்து, தொடர்ந்து தெலுங்கில் அனுபமாவிற்கு வாய்ப்புகள் குவியத்தொடங்கியது. வருடத்திற்கு இரண்டு, மூன்று படங்கள் அனுபமா நடிப்பில் தெலுங்கில் வெளியாகியது. ஆனால், கொரோனா பாதிக்கப்பட்ட 2020 மற்றும் 2021ம் ஆண்டு மட்டும் எந்த படங்களும் தெலுங்கில் அனுபமாவிற்கு வெளியாகவில்லை.


இந்தாண்டு ரவுடி பாய்ஸ் படம் வெளியாகியுள்ளது. இன்னும், 18 பேஜஸ், கார்த்திகேயா 2, ஹெலன் ஆகிய மூன்று படங்களில் அனுபமா நாயகியாக நடித்து வருகிறார்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண