பார்க்க வெள்ளந்தியாக , பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி , எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய ஒரு ஹீரோயின் வேணும்பானு கேட்டா , பரிந்துரை பட்டியலில் முதலில் வருபவர் அஞ்சலிதான். ராம் அறிமுகப்படுத்திய நாயகி அஞ்சலி . கற்றது தமிழ் படத்தில் “நிஜமாத்தான் சொல்லுறியா” என கண்கள் நிறைய ஏக்கத்துடன் ஆனந்தியாக வலம் வருவார். அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்த அஞ்சலி , தற்போது மீண்டும் ராமின் இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் இயக்குநர் ராமிற்கும் தனக்கு இருக்கும் இருக்கு உறவு என்ன என்பதை குறித்தும் நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறர்.
அதில்”நான் ஜெய்-ஐ காதலிக்கிறேன்னு சொன்னாங்க. அதுக்கப்பறம் அவங்களே எழுதுறதை நிறுத்திட்டாங்க. இந்த மாதிரியான வதந்திகளுக்கு நான் எப்போதுமே ரியாக்ட் பண்ண மாட்டேன் . நடிக்க வந்த ஆரம்ப காலக்கட்டத்துலதான் இது மாதிரியான வதந்திளுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கி, ரூமில் உக்காந்து அழுவேன். யாரை பார்த்தாலுமே அதை பற்றி பேசுவேன். இப்போ அது மாதிரியான செய்திகள் வரும் பொழுது, உண்மையாக இருந்தால் எப்படி அவங்களுக்கு தெரியும்னு யோசிப்பேன். நான் பண்ணாத ஒன்ன எழுதியிருந்தால் , ஒரு வேளை எனக்கு திருமணம் ஆகிவிட்டதுனு எழுதியிருந்தால் அடப்பாவிங்களா என்னை கூப்பிடவே இல்லைனு தோணும் .ராம் சார் எப்போதெல்லாம் என்னை நடிக்க அழைப்பு விடுக்கிறாரோ , அப்போதெல்லாம் அது என்ன கதாபாத்திரமாக இருந்தாலும் நான் நடிப்பேன். ஏன்னா அது நான் அவர் மேல வச்சிருக்க கூடிய மரியாதை, அவர்தான் என்னை அறிமுகப்படுத்தினார். 10 , 11 வருடங்கள் சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதுக்கு காரணம் அவர்தான்.என்ன எப்போதுமே ஆனந்தினுதான் கூப்பிடுவார் . அவரை நான் அப்பா மாதிரிதான் பார்க்குறேன். அதனால அவர் படம் எடுக்குறாருனா நான் ரொம்ப ஜாலியா இருப்பேன் .”என அஞ்சலி மனம் திறந்து பேசியிருக்கிறார் அஞ்சலி.