நிஜமாத்தான் சொல்லுறியா என்ற வெள்ளந்தி வசனம் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர் நடிகை அஞ்சலி. முதல் படமே அஞ்சலிக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதை பெற்றுத்தந்தது. கற்றது தமிழ் திரைப்படத்திற்கு பிறகு ,ஆயுதம் செய்வோம் , அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் , மங்காத்தா உள்ளிட்ட பல படங்கள் அஞ்சலியின் நடிப்பை கொண்டாட வைத்தது. குறிப்பாக அங்காடி தெரு திரைப்படம் மற்றொரு ஃபிலிம்பேர் விருதை அஞ்சலிக்கு சொந்தமாக்கியது.இறுதியாக பலூன் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் அஞ்சலி. அந்த படம் வெளியாவதற்கு முன்னதாக அஞ்சலியும் ஜெய்யும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. இன்னும் சிலரோ இருவருக்கும் ரகசிய திருமணமாகிவிட்டதாகவும் கிசு கிசுத்தனர். இப்படியான வதந்திகள் தன்னை ஒருபோதும் பாதிக்காது என்றும் , ஆரம்ப நாட்களில்தான் இப்படியான் வதந்திகளுக்காக நான் அழுதேன். இப்போதெல்லாம் பழகிவிட்டது என்றும் , தன்னை குறித்து வரும் செய்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் , எப்படி தெரியும் என யோசிப்பேன். வதந்தியாக இருந்தால் கண்டுக்கொள்ளவே மாட்டேன் என அஞ்சலி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் "பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் அனைவரையும் நீயெல்லாம் ஆம்பளையானு நிக்க வச்சு கேட்கலாம். காதல் உறவுகளில் லாயலிட்டிதான் முக்கியம். எனக்கு கருப்பு கலர் ரொம்ப பிடிக்கும் ஆனால் மாப்பிள்ளை ஓரளவுக்கு வெள்ளையாத்தான் இருக்கனும். பேட்ட படத்துல எனக்கு த்ரிஷா ரோல்லதான் நடிக்க கமிட் பண்ணாங்க. ஆனால் நடிக்க முடியாம போயிடுச்சு அந்த வருத்தம் எனக்கு எப்போதுமே உண்டு. “ என தெரிவித்துள்ளார் அஞ்சலி