தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக அறியப்படுபவர் நடிகை ஆண்ட்ரியா. கோலிவுட்டில் பாடகியாகவும் , நடிகையாகவும் அறியப்படும் ஆண்ட்ரியா மிகுந்த துணிச்சல் மிக்கவர் . தனக்கு தோன்றும் கருத்துகள் எதுவாக இருந்தாலும் மனம் திறந்து பேசக்கூடியவர் . அப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு பிரபலமான Me Too விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தர்.
அதில் ” Metoo moment ஹாலிவுட்ல இருந்துதான் தொடங்கியது. மிகப்பெரிய தயாரிப்பாளரான harvey weinstein மீது பல பெண்கள் அடுக்கடுக்கான பாலியல் புகார்களை முன்வைத்தார்கள் . அது எவ்வளவு பெரிய முன்னேற்றம். ஒரு மிகப்பெரிய ஆளின் பிம்பத்தை வெளியில் கொண்டுவந்தது பிரம்புதானே. இது கடந்த 10 வருடங்களுக்கு முன்னால் செய்திருக்க முடியுமா . இப்போ உலகம் வேறு மாதிரியாக மாறியிருக்கிறது. இப்போது உலகம் பெண்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க தயாராகிவிட்டது. “ஏய் சும்மா இருடி “ அப்படினு யாரும் சொல்ல முடியாது. ஏன் பழைய கதையை ஏன் இப்போ பேசுறீங்கன்னு கேட்குறாங்க. எப்போ செய்தாலும் தப்பு தப்புதான். metoo moment போன்றவற்றால் இன்றைய தலைமுறை எப்படி பெண்களை மதிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்வார்கள்.
எனக்கு ஒரு பையனை பிடிச்சுருக்கு. அந்த பையனுக்கு என்னை பிடிச்சுருக்கு நாங்க டேட் பண்ணுறோம் அப்படினா அது வேற. நான் என்னை மதிக்குறேன். என்னோட தரம் எனக்கு தெரியும். என் திறமை எனக்கு தெரியும் நான் வேலைக்காக படுக்கையை பகிற மாட்டேன். என துணிந்து ஒரு பெண் சொன்னால் casting couch இல்லாமலே போயிடும். அவங்களுக்கு அந்த தன் நம்பிக்கை இருக்கனும். அதை விட்டுட்டு அவங்கள் காம்ப்ரமைஸ் செய்ய விரும்பினால் , ஆண்களும் மனிதர்கள்தான் அவங்களும் விருப்பப்படுவார்கள் நான் ஒரு பெரிய திரைப்பட குடும்பத்தில் இருந்து வரவில்லை. எனக்கு மிகப்பெரிய இயக்குநர் அல்லது தயாரிப்பாளரையெல்லாம் தெரியாது.நான் திறமையையும் கடின உழைப்பையும் நம்பி வந்தேன். பல படங்கள் பண்ணியிருக்கேன். ஆனால் இன்றளவும் casting couch ஐ நான் சந்தித்தே கிடையாது. இதுக்கு உங்களுக்கு நிறைய நேரம் எடுக்கலாம் ஆனால் சாத்தியமாகும் “ என மனம் திறந்து பேசியிருக்கிறார் ஆண்ட்ரியா.