Pisasu 2: திட்டமிட்ட தேதியில் ரிலீசாகாமல் தள்ளிப்போகும் ‘பிசாசு-2’ ... என்ன காரணம்?
கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குநர் பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு படம் வெளியானது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக இப்படம் பெரும் வெற்றி பெற்றது

இயக்குநர் மிஷ்கினின் அடுத்தப்படமான பிசாசு 2 படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குநர் பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு படம் வெளியானது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்ற இப்படத்தின் 2 ஆம் பாகம் பிசாசு 2 என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆண்ட்ரியா முன்னணி கேரக்டரில் நடிக்க, அவரோடு ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா சந்தோஷ் பிரதாப், அஜ்மல் அமீர் உட்பட பலரும் நடித்துள்ளனர். மேலும் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ராக்ஃபோர்ட் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் பிசாசு 2 படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.
Just In




பாத் டப்பில் கையில் சிகரெட்டுடன் ஒரு பெண் படுத்திருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இப்படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடிப்பதாக தகவல் வெளியானதால் படம் பற்றி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் சமீபத்தில் குழந்தைகளும் பார்க்கும் வண்ணம் ஆண்ட்ரியாவின் நிர்வாண காட்சிகளை படக்குழு நீக்கியதாக தகவல் வெளியானது. இதனால் இயக்குநர் மிஷ்கினை கலாய்த்து மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தன.
முன்னதாக பிசாசு 2 படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கடைசியாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான போஸ்டரில் ரிலீஸ் தேதி இடம் பெறாததால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இந்நிலையில் இன்னும் ஒரே வாரம் மட்டுமே உள்ள நிலையில் அதே தேதியில் வெளியாகும் கோப்ரா, நட்சத்திரம் நகர்கிறது படக்குழுவினர் முழுவீச்சில் புரொமோஷன் பணிகளில் கவனம் செலுத்தியுள்ளனர். ஆனால் பிசாசு 2 ரிலீசாகுமா என்னும் அளவுக்கு அதன் புரொமோஷன் பணிகள் தொடங்கப்படவில்லை. பிசாசு 2 படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காத நிலையில் படம் தள்ளிப்போவது உறுதியானதால் பிசாசு 2 செப்டம்பர் முதல் அல்லது 2வது வாரம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.