நாடு முழுவதும் COVID-19 பரவல் அதிகமாக இருப்பதால் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது .சாதாரண மக்கள் தொடங்கி அரசியல் பிரபலங்கள் , சினிமா பிரபலங்கள் என்று பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் . தமிழ் சினிமாவில் பலரும் பாதிக்கப்பட்டுவரும் இந்த நிலையில், சமீபத்திய பாதிப்புக்குள்ளான நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா, ஒரு வாரத்திற்கு முன்பு கோவிட் -19 பாசிட்டிவ் என்று தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் கடைசியாக இவர் நடித்திருந்தார். நடிகையும் பாடகியான ஆண்ட்ரியா தனது உடல் நலம் குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாகவும், சமூக வலைதளங்களில் இருந்து சிறிது நாள் தள்ளி இருந்து தனது உடல்நலத்தை கவனித்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார் .
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டபொழுது பாடகியான ஆண்ட்ரியா ஒரு பாடல் ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில் "இந்த உலகம் என்னுடையது என்றால்!!! "அனைவருக்கும் அன்பு, கடந்தவாரம் நான் கோவிட் 19 பாசிட்டிவ் என கண்டறியப்பட்டேன். என்னைச் சந்தித்த எனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். என்னை கவனித்துக்கொள்பவர்களுக்கும் நன்றி. நான் இன்னும் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கிறேன், ஆனால் நன்றாக குணமடைகிறேன்" என்ற பாடலை பதிவு செய்துள்ளார் .
"சமூக ஊடகங்களில் இருந்து தள்ளியிருந்தேன். ஓரளவுக்கு நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாலும், இதுபோன்ற நேரத்தில் என்ன பதிவிடுவது என்று எனக்குத் தெரியவில்லை. நம் நாடு செல்லும் இந்த மோசமான நெருக்கடியில், என்ன செய்வது என்ன பேசுவது என்று தெரியவில்லை . எப்பொழுதெல்லாம் எனக்கு மனது ஒரு நிலையில் இல்லையோ அப்பொழுது எல்லாம் மனம்திறந்து பாடுவேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கிடையில், சுந்தர் சி இயக்கிய சூப்பர்ஹிட் பிரபலமான திகில் படத் தொடரான 'அரண்மனை' மூன்றில் ஆண்ட்ரியா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.