கொரோனாவோடு கத்திரி வெயிலும் சேர்ந்து தற்போது மக்கள் எல்லோரையும் வாட்டிக் கொண்டிருக்கிறது. ‘கொரோனா வந்து வியர்த்துக் கொட்டுது. மூச்சு விடுறது அவ்வளவு கஷ்டமாயிருக்கு.தூக்கமும் சரியாக வருவதில்லை. உடல் அயற்சியாக இருக்கு, இதில் வெயில் வேற’ என அடுக்கடுக்காகப் புகார் அளிப்பவர்களுக்கு வீட்டின் கிச்சனில் இருக்கும் மசாலாப் பொருட்களே இதிலிருந்து தப்பிக்கப் போதுமானது என்கிறார் அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் சித்தமருத்துவக்கல்லூரி மருத்துவர் தீபா.




அவர் கூறும் டிப்ஸ்கள் சில,



  • கொரோனா வைரஸ் தாக்குதல் , வெயில் பாதிப்பு இரண்டுக்குமே நீர்தான் ஃபர்ஸ்ட் எய்ட்.

  • ஒரு டம்ளர் மோரில் அரைத்த இஞ்சி, கொத்துமல்லி மற்றும் பெருங்காயம் கலந்து தினமும் மதியம் குடிக்கலாம்.

  • சர்க்கரை அல்லது ஐஸ் சேர்க்காமல் சாத்துக்குடி, ஆரஞ்சு அல்லது பெரிய நெல்லிக்காய் சாறு இதில் ஏதேனும் ஒன்றை தினமும் குடிக்கலாம்.


  • இயற்கை மருத்துவச் சாறு குடிக்கலாம்.



          செய்முறை : 5 மிலி எலுமிச்சைச் சாறு, நெல்லிக்காய் சாறு, சிறிது மஞ்சள் தூள், 10 துளசி இலையினுடைய சாறு இதில் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை போதுமான அளவு சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் வைட்டமின் – சி உடலுக்குக் கிடைக்கும். வெயிலின் தாக்கமும் உடலுக்குத் தெரியாது.


  •  இயற்கை மருத்துவக் கசாயம் பருகலாம்.



    செய்முறை: ஒரு சிட்டிகை அளவு அதிமதுரம், மஞ்சள் தூள், மிளகு தூள் அதில் ஒரு இடித்து நசுக்கிய இஞ்சித் துண்டு மற்றும் துளசி இலைச்சாறு சேர்த்து கொதிக்கவிட்டு அந்த கஷாயத்தை தினமும் 20 மிலி குடிப்பது நுரையீரலை வலுப்படுத்துகிறது. கொரோனா கத்தரி வெயில் என இரண்டு தாக்குதலில் இருந்தும் சமாளித்துக்கொள்ள வீட்டில் இருக்கும் மசாலா டப்பாவே போதுமானது.


  • கொரோனா காலத்திலும் அலுவலகம் செல்கிறீர்களா? அப்போ இந்த யோகா உங்களுக்குத்தான்.



               இதனுடன் கைகளை நீட்டி மடக்கி மூச்சுவிடும் யோகாவையும் (Hand stretch breathing)நாங்கள் அறிவுறுத்துகிறோம்.


Hand stretch Breathing-செய்வது எப்படி?


 



              இதனை நின்றபடியோ அல்லது உட்கார்ந்தபடியோ செய்யலாம். கைவிரல்கள் இரண்டையும் கோர்த்து மார்பின் மீது வைத்துக்கொள்ளவும். மூச்சை உள்ளிழுத்தபடியே கோர்த்த கைகளை வெளிப்புறமாக மார்புக்கு எதிர்புறமாக நன்றாக நீட்டவும். பிறகு பொறுமையாக மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் கைகளை மார்புக்குக் கொண்டுவரவும். இதுபோல மூன்று முறை செய்யவேண்டும். இதே போல கைகளைக் கோர்த்து தலைக்கு மேல் உயர்த்தியபடியும் செய்ய வேண்டும்.  இது நுரையீரலை நன்கு விரிவடையச் செய்யும் மேலும் தோள்பட்டைப்பகுதியை லேசாக வைத்திருக்கும். முக்கியமாக கொரோனா காலத்திலும் அலுவலகத்துக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் தங்களது இருக்கையில் அமர்ந்தபடியே இந்த உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.


 


Also Read: கொரோனாவுக்கு உலகளவில் 32.54 லட்சம் பேர் உயிரிழப்பு